×
 
☰

தேனி சிறை கைதிகள் எஸ்கேப்! தலைமறைவாக உள்ள 2 பேர் டூவிலரில் தப்பியோட்டம்? போலீசார் தீவிர சோதனை!

அதில் பொன்முத்து செல்வம் மற்றும் ரெஜின் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு கானா விளக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி துணைச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் நேற்று முன்தினம் இரவு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறைக் காவலரைத் தாக்கி முதன்மை வாசல் வழியாக அவர்கள் தப்பிச் சென்றனர். போலி மருத்துவ அவசரத்தை உருவாக்கி காவலரை அறைக்குள் அழைத்துத் தாக்கியதாகத் தொடக்க விசாரணையில் தெரியவந்துள்ளது.

தப்பியோடிய 17 கைதிகளில் இதுவரை 15 பேர் போலீசாரால் பிடிபட்டுள்ளனர். சிறை வளாகம் அருகே உள்ள அமச்சியாபுரம் மலைப்பகுதியில் பதுங்கியிருந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் சாலையோரத்தில் தூங்கிய குழந்தை மாயம்! 6 தனிப்படை தேடுதலுக்கு பின் ஆந்திராவில் மீட்பு!

அதில் பொன்முத்து செல்வம் மற்றும் ரெஜின் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு கானா விளக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மீனாட்சி சுந்தரம் மற்றும் திருப்பதி ஆகிய இருவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாகக் கிடைத்த தகவலை அடுத்து போலீசார் கானா விளக்கு பகுதியில் கடந்து செல்லும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சுற்றுப்புற மலைப்பகுதிகள் மற்றும் சாலைகளில் தேடுதல் தொடர்கிறது.

சிறைத்துறை டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பாதுகாப்புக் குறைபாடுகளுக்காக சிறை ஊழியர்கள் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள கைதிகளைப் பிடிக்க மாநிலம் முழுவதும் விழிப்புடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் சந்தேகமான தகவல்களை போலீசாருக்குத் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரை சிறுவன் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்? தாய் - மகன் அதிரடி கைது! விசாரணையில் வெளியான பகீர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share