×
 

“உன் வீட்டுல ஒரு ரூபாய் கூட இல்ல...எதுக்கு இத்தனை கேமரா?”... ஓனருக்கு கடிதம் எழுதிய திருடன்!

நெல்லையில் திருடச் சென்ற வீட்டில் எதுவும் இல்லாததால் விரக்தியில் உரிமையாளருக்கு திருடன் கடிதம் எழுதிவைத்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

நெல்லையில் திருடச் சென்ற வீட்டில் எதுவும் இல்லாததால் விரக்தியில் உரிமையாளருக்கு திருடன் கடிதம் எழுதிவைத்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

நெல்லையில் ஜேம்ஸ் பாண்ட் என்பவரின் வீட்டிற்குள் புகுந்த திருடன், பீரோ மற்றும் பொருட்களை உடைத்து நகை, பணம் உள்ளதா? என்று தேடிவிட்டு நான்கு பக்கம் கொண்ட கடிதத்தை எழுதி வைத்து சென்றுள்ளார்.

நெல்லை பழைய பேட்டை ஐஓபி காலனியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் பால் (வயது 57). இவர் கிறிஸ்தவ மத ஊழியம் செய்து வருகிறார். இவரது மகள் மதுரையில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிகிறார். அவரைப் பார்ப்பதற்காக ஜேம்ஸ் பால் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு நேற்று நவ.24 மதுரைக்கு புறப்பட்டு உள்ளார். 

இந்த நிலையில் நேற்று காலை ஜேம்ஸ் பால், வீட்டின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.  அதன் அடிப்படையில் பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள பொருள்கள் சிதறி கிடந்தன. 

இதையும் படிங்க: #BREAKING வங்கக்கடலில் இன்று உருவாகிறது ‘சென்யார்’ புயல்.... எங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்?

அப்போது அந்த வீட்டின் ஒரு அறையில் இருந்த கணினி மேஜை அருகே 4 பேப்பர்களில் ஏதோ கடிதம் போல் எழுதி இருந்துள்ளது. அந்த கடிதத்தில்,  “உன் வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. இதற்கு இத்தனை கேமராக்கள் போங்கடா வெண்ணைகளா. அடுத்த முறை என்னைப்போல் வரும் திருடன்கள் ஏமாறாமல் காசாவது வை. மன்னித்துக் கொள்ளவும் இப்படிக்கு திருடன்...” என வீட்டிற்கு திருட வந்த திருடன் உரிமையாளருக்கு கடிதம் வைத்து விட்டு சென்றுள்ளார்.

அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது அது பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டின் உரிமையாளரான ஜேம்ஸ் பால் பேட்டை காவல் நிலையத்தில் தனது வீட்டில் உண்டியல், மற்றும் பணப்பையில் ரூ.25 ஆயிரம் பணம் இருந்ததாகவும் அது திருடு போயிருப்பதாகவும் புகார் அளித்துள்ளார். 

திருடன் எழுதி வைத்த கடிதத்தின் அடிப்படையிலும் சம்பந்தப்பட்டவர் புகார் அளித்ததின் அடிப்படையில் அந்தப் பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.  நெல்லையில் திருடச் சென்ற வீட்டில் எதுவும் பொருட்கள் கிடைக்காததால் விரக்தியில் திருடன் கடிதம் எழுதி வைத்து விட்டு சென்ற சம்பவம் பெரும் நகைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என் ரவிக்கு இதுதான் வேலை..!! லிஸ்ட் போட்டு தாக்கிய அமைச்சர் ரகுபதி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share