×
 

முருகன் கோவிலா... money counter- ஆ...? திருச்செந்தூரில் அமைச்சரிடமே அடாவடி கட்டண வசூல்..!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சரிடமே ரூ. 4000 கட்டண வசூல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்செந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தற்போது தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில் கட்டண வசூல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர்.

இதனை புதிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் ஆய்வுக்காக சென்ற அமைச்சரிடமே அர்ச்சகர்கள் அடாவடியாக பணம் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஐபி தரிசனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடமே பணம் கேட்ட அர்ச்சகர்களின் செயலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மாஸ்க் அணிந்து ஆய்விற்காக சென்ற போது அமைச்சர் என தெரியாமல் பணம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சாதாரணமாக டி-ஷர்ட் அணிந்து சென்ற அமைச்சரிடம் நான்காயிரம் ரூபாய் தந்தால் விஐபி தரிசனத்தில் அழைத்துச் செல்வதாக அர்ச்சகர்கள் கூறியுள்ளனர். நான்காயிரம் ரூபாயை ஜிபே மூலம் செலுத்தி விட்டு கோவிலுக்கு சென்ற அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அர்ச்சகர்களிடம் விசாரணையை நடத்தினார்.

இதையும் படிங்க: தவறு நிரூபித்தால் கடும் ஆக்ஷன்..! அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை..! போராட்டத்தை கைவிட்ட மாணவிகள்..!!

பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வுக்காக சென்ற போது மனம் கேட்டு அர்ச்சகர்கள் அடாவடி செயலில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தியது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் 100 ரூபாய் கட்டண தரிசனம் மட்டுமே நிலுவையில் இருக்கும் நிலையில் முறைகேடாக கட்டணம் வசூலிக்கப்படுவது அம்பலமாகி இருக்கிறது. பக்தர்களுக்காக கூட்டம் காரணமாக நூறு ரூபாய் கட்டண தரிசனமும் ரத்து செய்யப்பட்ட நிலையில் அமைச்சரிடமே வசூல் செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பணம் வசூலித்த அர்ச்சகர்கள் மட்டுமில்லாமல் அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் அமைச்சரமேஷ் தீவிர விசாரணை நடத்தி உள்ளார். 

இதையும் படிங்க: கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்! அடித்து விரட்டுவோம்! அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share