×
 

அமைச்சரிடமே வசூல்..! கல்லா கட்டிய திருச்செந்தூர் அர்ச்சகர் சஸ்பெண்ட்..! அமைச்சர் ரமேஷ் அதிரடி..!!

திருச்செந்தூரில் பணம் பெற்ற அர்ச்சகர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சரிடமே பணம் பெற்ற அர்ச்சகர் பணிகளை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சண்முக விலாச மண்டபம் வாயிலில் பணம் பெற்ற அர்ச்சகரை பணிகளை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். 

திருச்செந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தற்போது தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில் கட்டண வசூல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர். இதனை புதிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் ஆய்வுக்காக சென்ற அமைச்சரிடமே அர்ச்சகர்கள் அடாவடியாக பணம் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஐபி தரிசனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடமே பணம் கேட்ட அர்ச்சகர்களின் செயலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மாஸ்க் அணிந்து ஆய்விற்காக சென்ற போது அமைச்சர் என தெரியாமல் பணம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சாதாரணமாக டி-ஷர்ட் அணிந்து சென்ற அமைச்சரிடம் நான்காயிரம் ரூபாய் தந்தால் விஐபி தரிசனத்தில் அழைத்துச் செல்வதாக அர்ச்சகர்கள் கூறியுள்ளனர். நான்காயிரம் ரூபாயை ஜிபே மூலம் செலுத்தி விட்டு கோவிலுக்கு சென்ற அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அர்ச்சகர்களிடம் விசாரணையை நடத்தினார்.

இதையும் படிங்க: அன்னதானம் TO கோவில் வருவாய் வரை முழு audit..!! யாராக இருந்தாலும் நடவடிக்கை..! அமைச்சர் ரமேஷ் வார்னிங்..!!

இந்த நிலையில் சண்முக விலாச மண்டபம் வாயிலில் பணம் பெற்ற அர்ச்சகரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டார். பணிகளை நீக்கம் செய்யப்பட்ட அர்ச்சகர் கோவிலுக்குள் பணி செய்யவும் தடை விதித்து அறநிலையத்துறை அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அர்ச்சக ரோடு இணைந்து பணம் வாங்குவதற்கு உடந்தையாக இருந்த இரண்டு வாயிற் காவலர்கள் பணிகளை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் பணம் கேட்ட காரணத்திற்காக இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றனர்.  

இதையும் படிங்க: வைகாசி விசாகம் special..! ரூ.100 தரிசனம் ரத்து..! திருச்செந்தூர் கோயில் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share