பிரச்சார வாகனத்தில் ஏறிய தொண்டர்..!பதாகையால் அடித்து கீழே இறக்கிய திருமா..!!
இளைஞர்கள் பிரச்சாரத்தின் போது அத்துமீறியதால் ஆத்திரம் அடைந்த திருமா பாதியிலேயே திரும்பிச் சென்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்ட போது வாகனத்தில் ஏறி செல்பி வீடியோ எடுத்தார். நாள் ஆத்திரமடைந்த திருமாவளவன் தனது கையில் இருந்த பதாகையால் அந்த இளைஞரின் தலையில் அடித்து கீழ இறங்க வைத்தார்.
இதற்கு முன்னதாக, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஒரு இளைஞரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசிக சார்பில் பெரியகுளம் (தனி) தொகுதி வேட்பாளர் சக்திவேலைக்கு ஆதரவாக திருமாவளவன் பிரச்சார வாகனத்தில் ஏறி பொதுமக்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
பிரச்சாரம் சூடுபிடித்த நிலையில், விசிகவின் இளம் தொண்டர்கள் பிரச்சார வாகனத்தின் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்றனர். திருமாவளவன் பலமுறை “ஏய், கீழே இறங்கு முதல்ல” என்று எச்சரித்தும், அந்த இளைஞர்கள் கேட்காததால் அவரது பொறுமை இழந்தது. ஒரு இளைஞர் வாகனத்தின் முன்புறம் ஏற முயன்றபோது, ஆத்திரமடைந்த திருமாவளவன் அவரது கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார்.
இதையும் படிங்க: நேற்று கட்சி ஆரம்பித்து இன்னைக்கே முதல்வர் ஆகணுமா? - விஜயை மறைமுகமாக விளாசிய திருமா...!
இந்த நிலையில் பிரச்சாரத்தின் போது திருமாவளவனை இளைஞர்கள் சீண்டி வருவது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவன் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது அந்த வாகனத்தின் மீது ஏறி ஒரு இளைஞர் செல்ஃபி வீடியோ எடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த திருமாவளவன், அந்த இளைஞரை இத்தனை அது கையில் இருந்த பதாகையால் தலையில் அடித்து கீழே இறக்கிவிட்டார். பிரச்சார வேன் மீது ஏறிய தொண்டர்களை விளம்பர பதாகையால் அடித்த திருமாவளவன், கோபத்தில் பாதியிலேயே பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டார்.
இதையும் படிங்க: தலைவர் அடிச்சா அது ஆசீர்வாதம்..! திருமாவிடம் பளார் வாங்கிய இளைஞர் அந்தர் பல்டி..!!