×
 

நீட் தேர்வை ஒழிக்கணும்..! மக்களுக்கான பிரச்சனை இது... திருமாவளவன் கண்டன உரை..!

நீட் தேர்வை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார்.


நீட் என்பது இந்தியாவின் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். இது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ அமைப்புகளின் MBBS, BDS, BAMS, BHMS, BUMS உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கு அனுமதி பெறுவதற்கான ஒரே தகுதித் தேர்வு ஆகும். தேசிய தேர்வு முகமை இந்தத் தேர்வை நடத்துகிறது. இதற்கு முன்பு AIPMT என்று அழைக்கப்பட்ட இந்தத் தேர்வு, 2013 முதல் NEET எனப் பெயர் மாற்றம் பெற்று, 2019 முதல் NTA மூலம் முழுமையாக நடத்தப்படுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் MBBS உள்ளிட்ட படிப்புகளுக்கு அனுமதி பெற இந்தத் தேர்வு கட்டாயமாகும்.நீட் தேர்வு ஒரு ஒற்றை நாளில், ஒரே நேரத்தில் நாடு முழுவதும் நடைபெறும் OMR முறையிலான தேர்வு. பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக இந்த தேர்வு மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த நிலையில் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் மறு தேர்வு நடத்துவதற்கு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முற்றிலுமாக கைவிட வேண்டும் இன்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உரையாற்றினார். அப்போது, நீட் தேர்வை திரும்ப பெற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: குதிரை பேரம் ஆட்சியா..? குதிரை வேகத்தில் செயல்படும் அரசு... முதல்வர் விஜய் உரை..!

நீட் தேர்வை இந்திய அளவில் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தென்னிந்திய மாநிலங்களை ஒருங்கிணைப்பதற்கான முன்முயற்சி திராவிட கழகம் மேற்கொள்ளும் என்றால் உற்றத் துணையாக இருப்போம் என்று தெரிவித்தார். பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வை மத்திய அரசு நிபந்தனையற்ற முறையில் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்வை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  நீட் தேர்வு என்பது மாணவர்களுக்கு மட்டுமல்லாது மக்களுக்கும் பிரச்சனை என்றும் சிலர் வினாத்தாளை மோசடியாக வாங்கி தேர்வு எழுதுவதற்கு 22 லட்சம் மாணவர்களை பழிவாங்கும் வகையில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு , 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடத்திட்டங்களுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: அரசியலில் நாங்க தான் சீனியர்..! எதிரி கட்சி இல்ல.. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேரவையில் உரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share