×
 

பதவி ஆசையா.? தவெக கூட்டணி எதற்கு..? சர்ச்சைகளுக்கு டாட் வைத்த திருமா..!

தமிழக வெற்றி கழக கூட்டணியில் இணைந்தது ஏன் என விசிக திருமாவளவன் விளக்கம் கொடுத்தார்.

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் தலைமையில் புதிதாக உருவான கட்சி பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி சவாலை எதிர்கொண்டது.

இந்தத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று மிகப் பெரிய கட்சியாக உருவெழுந்தாலும், 118 உறுப்பினர்கள் தேவைப்படும் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. இந்தச் சூழலில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம் பெற்ற சம்பவம் நிகழ்ந்தது.

பதவி ஆசைக்காக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி என்ற முடிவை எடுக்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகி இருக்கும் நிலையில் ஏன் இந்த முடிவை எடுத்தோம் என்பதை திமுக தலைவர் ஸ்டாலினிடம் கூறியிருப்பதாகவும் கூறி தெரிவித்தார். அரசியல் சூழல் காரணமாக தமிழக வெற்றி கழக கூட்டணியில் இணைந்தோம் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விசிக கனவு நினைவாச்சு..! அமைச்சரவையில் பங்கு... முதல்வர் விஜய்க்கு நன்றி கூறிய திருமா.!

ஸ்டாலினோ உதயநிதியோ எங்கள் முடிவை எதிராக பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். விசிக நிர்வாக குழுவில் உள்ள பெரும்பான்மை நபர்கள் தவெக அமைச்சரவையில் இணையவே விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார். திமுக தலைவர் ஸ்டாலினிடம் கூறிவிட்டு தான் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு என்ற முடிவை எடுத்தோம் என கூறியுள்ளார். கட்சியின் நலன்களை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் இடம் பெற்றதாக கூறியுள்ளார். 

இதையும் படிங்க: "நாளைக்கு சொல்றோம்"..! விசிக அமைச்சரவையில் இணைகிறதா..? சஸ்பென்ஸ் வைத்த திருமா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share