திமுக கூட்டணியில் தேமுதிக... அரசியல் எதிரிகளின் அடிவயிறு எரியும்..!! - திருமா. தாக்கு..!!
திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவிற்கு திருமாவளவன் வரவேற்பு தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து இருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, எல். கே.சுதீஷ் உள்ளிட்டோரும் இந்த சந்திப்பின்போது போது உடன் இருந்தனர். முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்பு இது நடந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். முதல்வர் ஸ்டாலின் தேமுதிக கட்சியை வரவேற்றார்.
திமுக கூட்டணி கட்சிகள் தேமுதிக இணைவுக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளன. அதேபோல் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து உள்ளன. கேப்டன் ஆன்மா மன்னிக்காது என பாஜகவும், தோல்வி அடைய வாழ்த்துகள் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு, இரட்டை இலக்கத்தில் சீட்டு... எதிர்பார்க்காத ட்விஸ்ட் வைத்த திருமா...!
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது பெருமகிழ்வளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இக்கூட்டணி மேலும் வலிமை மிக்கதாக மாறியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தங்கள் உறுதியான வெற்றிக்கு இந்த இணைவு ஏதுவாக அமையும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார். அரசியல் பகைவர்களின் அடிவயிறு குமையும் என்றும் அவர் தெரிவித்தார். திமுக கூட்டணி உடையும் என்கிற அவர்களின் கனவில் மண் விழுந்தது என்றும் கலைஞரின் கனவு நனவாகும் வகையில் பழம் நழுவி பாலில் விழுந்தது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “முடிஞ்சா வேங்கைவயலுக்கு போய் பாருங்க”... திருமாவுக்கு தில்லா சவால்விட்ட தமிழிசை சவுந்தரராஜன்...!