×
 

அடேங்கப்பா... திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 1.20 கோடி பிளேடு நன்கொடை...!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகளை தேவஸ்தானத்திற்கு வழங்கி உள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில், உலகின் மிகப் புகழ்பெற்ற வைணவத் தலங்களில் ஒன்று. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், திருமலை என்னும் ஏழு மலைகளின் ஏழாவது சிகரமான வெங்கடாத்ரியில் அமைந்துள்ள இக்கோவில், ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி என்னும் விஷ்ணு அவதாரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. கலியுகத்தில் மனிதகுலத்தை காப்பாற்ற விஷ்ணு இங்கு தோன்றியதாக ஐதீகம். இதனால் இத்தலம் "கலியுக வைகுண்டம்" என்றும், இறைவன் "கலியுக ப்ரத்யக்ஷ தெய்வம்" என்றும் போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் இக்கோவில், உலகின் செல்வந்தமான கோவில்களில் ஒன்று.

திராவிடக் கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணமான இக்கோவில், அனந்த நிலயம் என்னும் விமானத்தின் கீழ் அமைந்துள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட கோபுரம், உயரமான துவாரங்கள், சிற்பங்கள் நிறைந்த மண்டபங்கள் ஆகியவை கம்பீரத்தை ஏற்படுத்துகின்றன. திருப்பதி ஏழுமலையான் தரிசனம், பக்தர்களுக்கு ஆன்மிக அமைதியையும், வாழ்வில் வெற்றியையும் அளிக்கும் என்று நம்பப்படுகிறது. 

திருப்பதி ஏழுமலையானை வணங்கும் பக்தர்கள் காணிக்கையாக பணம் மட்டுமல்லாது தங்கம், வெள்ளி விலை உயர்ந்த பொருட்களை காணிக்கையாக வழங்குவது உண்டு. கிலோ கணக்கில் தங்க நகைகளை காணிக்கையாக வாரி வழங்குவார்கள். அப்படி ஒரு பிரியம் திருப்பதி ஏழுமலையான் மீது… இந்த நிலையில் பக்தர் ஒருவர் பிளேடுகளை நன்கடையாக கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீப விவகாரம்... நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாதது ஏன்? சரமாரி கேள்வி...!

ஏழுமலையான் கோவிலுக்கு நன்கொடையாக கொடுக்கப்பட்ட பிளேடுகளின் மொத்த மதிப்பானது ஒரு கோடியே 2 லட்ச ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றின் இயக்குனர் ஸ்ரீதர் போடு பள்ளி என்பவர் சில்வர் மேக்ஸ் அரை பிளேடுகளை தேவஸ்தானத்திற்கு வரும் பக்தர்களுக்கு மொட்டை அடிப்பதற்கு நன்கொடையாக வழங்கி உள்ளார்.

இதையும் படிங்க: 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை: கனிமொழி தலைமையில் 12 பேர் குழு! – தி.மு.க. அறிவிப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share