×
 

விஷவாயுத் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சோகம்... சாய ஆலை உரிமையாளர் மீது பாய்ந்த வழக்கு!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைபுதூரில் விஷ வாயுத்தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு பேரும் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான சாய ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திங்கள்கிழமை வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சுமார் 7 அடி ஆழமுள்ள சாயக்கழிவு நீர்த்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே, திடீரென விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்களும் மயக்கம் அடைந்தனர். இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றியதோடு சாய ஆலையின் உரிமையாளர் நவீன் மற்றும் சின்னசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share