திருப்பூரில் நடந்த கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சோகம்..!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம், நத்தக்காடையூர் அருகே கேரளா பதிவின் கொண்ட காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பயணித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
தந்தை ராஜா, தாய் ஜானகி, மூத்த மகள் ஹேமி நேத்ரா ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் படுகாயம் அடைந்த இளைய மகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்..! அதிர்ச்சியில் திருப்பூர் மக்கள்..!
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விபத்து நடந்த இடத்தில் காரில் இருந்த ஏராளமான நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். விபத்தில் பலியான ஜானகி என்பவர் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பிஎச்சி செவிலியராக பணியாற்றி வந்தவர் என தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: சாத்தான்குளம் விபத்து எதிரொலி! ஆட்சியர்கள் இதை செய்ய தவறினால் அவ்வளவுதான்... தமிழக அரசு அதிரடி!