×
 
☰

திருப்பூரில் அதிர்ச்சி.! ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட அரசு பள்ளி மாணவர்கள்..! வைரலாகும் சம்பவம்..!!

திருப்பூர் மாநகரில், ஆயுதங்களுடன் அரசு பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொங்கு மெயின்ரோட்டில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ரெயில் நிலைய பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே யார் பெரியவர் என்பது தொடர்பாக அவ்வப்போது மோதல்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் ரெயில் நிலைய பகுதியில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாலை பள்ளி முடிந்து குமரன் சிலை சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக நின்றிருந்தனர்.

அப்போது அங்கு கொங்கு மெயின்ரோட்டை சேர்ந்த மாணவர்கள் சுமார் 30 பேர் கம்புகள், இரும்பு கம்பிகளுடன் கொலைவெறியுடன் கத்திக்கொண்டு எதிர்தரப்பு மாணவர்களை தாக்கும் விதமாக ஓடிவந்தனர். இதைக்கண்டு எதிர்தரப்பு மாணவர்கள் அங்கிருந்து ரோட்டில் ஓட்டம் பிடித்தனர்.

அவர்களை கம்பு, இரும்பு கம்பிகளுடன் வந்தவர்கள் நடுரோட்டில் விரட்டி விரட்டி தாக்கினார்கள். அடியை வாங்கிக்கொண்டு அந்த மாணவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

 

இதையும் படிங்க: ஒரே நாளில் வேலை..! மாற்றுத்திறனாளியின் கோரிக்கை..! சட்டென நிறைவேற்றிய CM விஜய்..!

இதனிடையே மாணவர்கள் இரும்புகம்பி, கம்புகளுடன் வந்ததை பார்த்து பஸ் நிறுத்தில் நின்ற பயணிகளும் மிரட்சியுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அங்கு கடை வைத்திருப்பர்கள் இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மாணவர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு காரணம் என்ன? யார்யார் தாக்குதலில் ஈடுபட்டனர்? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் ஆயுதங்களுடன் கூடிய தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு முதல் தொழில் முதலீடு வரை.! விஜய் அமைச்சரவையின் 4 முக்கிய முடிவுகள்..! நிர்மல் குமார் பேட்டி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share