×
 

18 பேரை காவு வாங்கிய அமோனியா வாயு கசிவு... ஆலை உரிமையாளர்கள் உட்பட மூவருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

அமோனியா வாயு கசிவால் கைது செய்யப்பட்ட ஆலை உரிமையாளர்கள்  உட்பட 3 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து  திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமோனியா வாயு கசிவால் கைது செய்யப்பட்ட ஆலை உரிமையாளர்கள் 
உட்பட 3 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து  திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21ம் தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு தொழிற்சாலையில் பணியாற்றிய 80 மேற்பட்டோர் வடமாநிலத்தவர்கள் பாதிக்கப்பட்டனர். 

அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டர்களை ஆம்புலன்ஸ் மூலம் மஞ்சங்காரணை, செங்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்

இதையும் படிங்க: #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

இதில் 51 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில். மேலும் 14 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஸ்டான்லி, மஞ்சங்காரணை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா, அசாம், ஜார்க்கண்டு மாநிலங்களை  சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர் 

 இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. சாய் பிரனித் உத்தரவின் பேரில் பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிற்சாலையின் உரிமையாளர்களான சென்னை வண்ணாரப்பேட்டை சேர்ந்த  மோகன், ஜோசப் ஜெகன்,  மற்றும் தொழிற்சாலையின்  மேலாளர் டேனியல், தொழிற்சாலையின் ஒப்பந்ததாரர் ஆந்திரா மாநிலம் சூலூர் பேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்து ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

 இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட  மோகன், ஜோசப் ஜெகன்,  மற்றும் தொழிற்சாலையின்  மேலாளர் டேனியல், ஆகிய 3 பேரும் மட்டும் ஜாமீன் கேட்டு திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

 இந்த வழக்கில் ஆஜரான மாவட்ட அரசு வழக்கறிஞர் பி.என்.உதயகுமார் 18 உயிர் போக காரணமாக இருந்த 3 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்று கடுமையாக ஆட்சேபனை செய்தார்.

 இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி டாக்டர் ஜூலியட் புஷ்பா 3 பேரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 300 மீட்டருக்குள் மக்கள் நுழைய தடை... அமோனியா வாயு கசிவு குறித்து மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி தகவல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share