நாளுக்கு நாள் அதிகரிக்கும் தவெகவினரின் அட்ராசிட்டி... நகராட்சி அலுவலகத்திற்குள் கும்பலாக நுழைந்து செய்த காரியம்...!
திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் அத்துமீறி நுழைந்து முதலமைச்சர் விஜய் புகைப்படம் வைக்க கோரி தவெக சட்ட மன்ற உறுப்பினர்கள் நகராட்சி தலைவரிடம் வாக்குவாதம் செய்தது பரபரப்பு ஏற்பட்டது
திருவள்ளூர் நகராட்சியில் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. நகர மன்ற கூட்ட அரங்கில் முதல்வர் விஜய்யின் படத்தை வைக்கக்கோரி திருவள்ளூர் எம்எல்ஏ அருண்குமார், பூந்தமல்லி எம்எல்ஏ பிரகாசம் ஆகியோர் நகர மன்ற கூட்டத்திற்குள் நுழைந்து முதல்வர் விஜய்யின் படத்தை மாட்ட வேண்டும் என கூறிய நிலையில் அதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது யாரைக் கேட்டு உள்ளே வந்தீர்கள் எப்படி நீங்கள் புகைப்படம் வைப்பீர்கள் என கேட்டு சட்ட மன்ற உறுப்பினர்களுடன் நகர மன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நகர மன்ற தலைவர் சட்ட மன்ற உறுப்பினர்களை பார்த்து எப்படி நீங்கள் உள்ளே வருவீர்கள் யாரை கேட்டு உள்ளே வந்தீர்கள் என சட்ட மன்ற உறுப்பினர்களை பார்த்து கேள்வி எழுப்பிய நிலையில், நியாயமாக முதலமைச்சரின் படத்தை நீங்கள் தான் வைக்க வேண்டும் இன்னும் வைக்காததால் நாங்கள் வந்துள்ளோம் என பதிலளித்தனர்.
இதையும் படிங்க: அம்மோனியா கசிவில் இறந்ததாய் அறிவிக்கப்பட்ட பெண்! ஆந்திராவில் உயிருடன் இருப்பதால் பகீர்! அம்பலமானது மோசடி!
20-க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள் 2 சட்டமன்ற உறுப்பினர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் தீர்மானம் ஏற்றி தாருங்கள் நாங்கள் படத்தை வைத்து விட்டு செல்கிறோம் அதுவரை செல்ல மாட்டோம் என நகர மன்ற தலைவரின் இருக்கைக்கு முன்னால் 2 இருக்கைகளை போட்டு அமர்ந்தவர்கள் சட்ட மன்ற உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இதனை அறிந்த தமிழக வெற்றி கழக கட்சியினர் வெளியே காவல்துறையினர் அவர்களை உள்ளே விடாததால் கடும் கூச்சலிட்டு வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் தீர்மானம் நிறைவேற்றி முதலமைச்சரின் படத்தை வைப்போம் என தெரிவித்திருந்த நிலையில் சுமார் 2 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாத நிலையில் கூட்டம் முடிந்த நிலையிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது.
அனைவரும் ஒன்று கூடி கலந்தாலோசித்து தீர்மானம் நிறைவேற்றி முதல்வரின் படம் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
.
வாக்குவாதத்தின் போது திமுக நகர மன்ற உறுப்பினர் மேசையை அடித்து உங்களால் கடைசி வரை புகைப்படத்தை வைக்க முடியாது எனவும் கூச்சலில் ஈடுபட்டனர்.
கூட்டத்திற்கு வந்த பெண் திமுக நகர மன்ற உறுப்பினரை கூட்ட நெரிசலில் உள்ளே வர முயன்றவரை தமிழக வெற்றி கழகத்தினர் தள்ளிவிட்டதாக காவல்துறையினரிடமும், கட்சியினரிடம் பெண் திமுக கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அடுத்த கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றி புகைப்படம் வைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 7 உயிர்களை காவு வாங்கிய அமோனியா வாயு..! FIR- ல் திடுக்கிடும் தகவல்கள்...!