×
 

#BREAKING: கல்லூரி மாணவிக்கு சரமாரி வெட்டு..! போதை கும்பல் வெறிச்செயல்..! உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்...!!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியை கஞ்சா போதை கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டின் மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை கஞ்சா போதை கும்பல் பட்டாகத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போதை ஆசாமிகளை பார்த்ததும் கத்தி கூச்சலிட்ட மாணவிக்கு நேர்ந்த இந்த துயரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாது மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கஞ்சா போதை கும்பலைச் சேர்ந்த ஒருவன் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் மீதமிருக்கும் இரண்டு பேரையும் கைது செய்யக்கோரி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்று கேட்டு போராடி வருகின்றனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டு மொட்டை மாடியில் மாணவி ஒருவர் படித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, மாணவியை பார்த்த போதை ஆசாமிகள் மொட்டை மாடி மீது ஏறி அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது. போதை ஆசாமிகளின் செயலால் நடுங்கிய மாணவி கத்தி கூச்சலிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் மாணவியை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளது.

மாணவி அலறியதால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் அந்த கஞ்சா போதை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளதாக தெரிகிறது. கல்லூரி படிக்கும் மாணவி தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த போது வீட்டில் நுழைந்த கஞ்சா போதை கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். வெட்டு காயமடைந்த மாணவி ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மீஞ்சூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படிங்க: திருவள்ளூரில் நேர்ந்த துயரம்... அரசு பேருந்து மீது கார் மோதி தம்பதி பலியான சோகம்..!!

மாணவியை கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற கஞ்சா போதை கும்பலில் இருந்த ஒருவன் பிடிபட்டான். இதில் சம்பந்தப்பட்ட மேலும் இரண்டு பேரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராடி வருகின்றனர். வல்லூர் வாலாஜா என்ற ஊரில் நிகழ்ந்த இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

இதையும் படிங்க: உடல்நலம் தேறி வருகிறேன், விரைவில் களத்திற்குத் திரும்புவேன்! வானதி சீனிவாசன் உருக்கமான வீடியோ!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share