×
 

திருவள்ளூரில் இளைஞர் வெட்டிக்கொலை..! பட்டப்பகலில் நிகழ்ந்த கொடூரம்..! தொடர் விசாரணை..!!

திருவள்ளூரில் பட்டப் பகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக காவல் நிலையங்களுக்கு நிபந்தனை ஜாமீன் நிபந்தனைகளின்படி கையெழுத்து இட வரும் நபர்கள் மீது தாக்குதல் நடத்தி வெட்டிக் கொல்லும் அல்லது படுகாயப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இந்த நிகழ்வுகள் காவல் நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் நீதிமன்ற நிபந்தனைகளை நிறைவேற்றும் போது ஏற்படும் அபாயங்களை வெளிப்படுத்தி உள்ளன.

பழைய பகை, பழிவாங்கல் போன்ற காரணங்களால் எதிர்தரப்பினர் காவல் நிலைய வளாகம் அல்லது அதன் அருகேயே தாக்குதல் நடத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஒரு சம்பவத்தில் சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து இட வந்த ஒரு இளைஞர் உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இளைஞர், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்திருந்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர் வழக்கம்போல் காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட்டுவிட்டு அருகிலுள்ள உணவகத்திற்கு தன் மனைவியுடன் சென்றார். அங்கு திடீரென ஆறு பேர் கொண்ட கும்பல் புகுந்து அவரை சரமாரியாக வெட்டித் தாக்கியது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 

இதையும் படிங்க: திருமணத்திற்காக காத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்... இரவோடு இரவாக வெட்டி கொன்ற கொடூரம் ...!

இதுபோல பல சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் சூழ்நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. திருவள்ளூர் வெங்கல் அருகே காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு திரும்பிய இளைஞர் மாரிமுத்து பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்துவிட்டு தப்பியோடிய 3 பேர் அதிரடி கைது செய்யப்பட்டு உள்ளனர் . முன்விரோதமா அல்லது வழக்கு தொடர்பான கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: பெண்ணை துண்டு துண்டாக வெட்டி அண்டாவில் வேகவைத்த கொடூரம்... இளம் ஜோடி பற்றி அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share