8 நேரம் மின்வெட்டு... சாலையில் சீமைக்கருவேல மரங்களைப் போட்டு மக்கள் செய்த தரமான சம்பவம்...!
புல்லரம்பாக்கம் போலீசார் மின்வாரிய அலுவலர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு துண்டிக்கப்பட்ட மின்சாரம் விரைவில் சரி செய்து வழங்குமாறு தெரிவித்தனர்.
திருவள்ளூர் அருகே 8 நேரம் மின்வெட்டு கண்டித்து பொதுமக்கள் திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியில் மாலை 4 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் சுமார் 8 மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் பலமுறை மின்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டதாகவும், ஆனால் மின் துறை அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை என கூறி நூற்றுக்கு மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை
குறுக்கே சீமைகருவேல மரங்களை போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் போராட்டம் நீடித்ததால் வாகன ஓட்டிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிகவும் அவதிக்குள்ளாகினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த புல்லரம்பாக்கம் போலீசார் மின்வாரிய அலுவலர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு துண்டிக்கப்பட்ட மின்சாரம் விரைவில் சரி செய்து வழங்குமாறு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திருவள்ளூரில் இளைஞர் வெட்டிக்கொலை..! பட்டப்பகலில் நிகழ்ந்த கொடூரம்..! தொடர் விசாரணை..!!
பின்னர் சீரான மின்சாரம் வழங்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஊத்துக்கோட்டை பூண்டி சாலையில் இரவு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில், தினந்தோறும் இரவு நேரங்களில் இது போன்று மின்வெட்டு பிரச்சனை தொடர்ந்து ஏற்பட்டு வருவதாகவும், அதைப்போல் இன்று
மாலை 4 மணி அளவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் வழங்கப்படவில்லை.
இரவு நேரங்களில் இது போன்று அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள், தூக்கத்தை தொலைத்து கடும் சிரமத்துக்குள்ளாவதகாவும், மின்வாரிய அலுவலகத்திற்கு போன் செய்தாலும் யாரும் முறையான பதிலை அளிப்பதில்லை என
குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!