15 நாட்களில் 15 பேர் போக்சோவில் கைது... தவெக ஆட்சியில் தொடரும் பாலியல் தொல்லைகள்... என்ன நடக்கிறது திருச்சியில்?
திருச்சியில் தொடரும் பாலியல் வன்கொடுமை பிரச்சனைகளால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
திருச்சி காட்டூர் பகுதியை சேர்ந்த மனோஜ் இவர் தனது 15 வயது மகளை அழைத்துக் கொண்டு அரியமங்கலம் பகுதியில் உள்ள பேக்கரி கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
அப்போது திருச்சி அரியமங்கலம், மலையப்பன் நகரை சேர்ந்தவர் குஜிலி என்கிற ரங்கநாதன் (37)
சரித்திர பதிவேடு குற்றவாளி சாலையில் மது போதையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது தந்தை மனோஜ் தனது மகளுடன் பொருட்களை வாங்கி வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். திடீரென அவர்களுக்கு முன்பாக வந்து நின்ற ரவுடி ரங்கநாதன் அவர்களுக்கு முன்பாக ஆடைகளை கலைந்து சிறுமியை நோக்கி ஆபாச சைகை காட்டி நிர்வாணமாக நின்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த அஷ்ரப் அலி... தட்டித்தூக்கிய காவல்துறை...!
இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் சம்பவம் குறித்து பொன்மலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர்
சம்பவ இடத்திற்கு சென்று குடிபோதையில் இருந்த ரங்கநாதனை கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு போக்சோ வழக்கில் சிறையில் அடைத்தனர்.
கடந்த 15 நாட்களில் திருச்சியில் சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டிரைவர் ஒருவரும், திருச்சி முதலியார்சத்திரம் பகுதியை சேர்ந்த ஏழு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சி ரயில் நிலையம் அருகில் லாட்ஜில் ஒரு இளம் பெண்ணிற்கு போதை மாத்திரை கொடுத்து இருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் இரண்டு பேரும், இதனை தொடர்ந்து நேற்று திருச்சி எடமலைபட்டிபுதூர் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஒருவர் என இதுவரை 14பேர் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றும் 15 ஆவதாக ஒரு பாலியல் வன்கொடுமையில் கைது செய்யப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
தொடரும் இந்த பாலியல் வன்கொடுமைகளால் திருச்சியில் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அச்சத்தில் உள்ளனர். விரைந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: “மாதவிடாய்-னு சொல்லியும் என்னை...” - காவல் நிலைய பெண் ஊழியருக்கு நடந்த கொடூரம்...!