நாங்க தான் கொலை பண்ணோம்! ஆள் மாற்றி இளைஞரை வெட்டிக் கொன்ற சம்பவத்தில் 6 பேர் சரண்..!
திருவாரூரில் ஆள் மாற்றி இளைஞரை வெட்டி கொன்ற விவகாரத்தில் ஆறு பேர் சரணடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார். 30 வயதான இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அம்மையப்பன் கடைவீதியில் அதே ஊரைச் சேர்ந்த காளிதாஸ், பெரிய காளி ஆகியவுடன் நந்தகுமார் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் காளிதாஸ் மற்றும் பெரிய காளியை அறிவாளால் வெட்ட முயன்றுள்ளதாக தெரிகிறது.
இதில் இருவரும் தப்பி ஓடிய நிலையில் ஆள் மாற்றி நந்தகுமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். 2023 இல் நடந்த கொலை வழக்கு ஒன்றில் காளிதாஸ் மற்றும் பெரிய கால இருவருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. விசிக கொடி ஏற்றுவது தொடர்பாக நடந்த கொலையில் பாஜக பிரமுகர் காளிதாஸ் என்பவர் கைது செய்ய பட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.
தங்களை வெட்ட வருவதை சுதாரித்துக் கொண்ட காளிதாஸ் ஆற்றில் குதித்து தப்பியதாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கொரடாச்சேரி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதுடன் தப்பிய உடைய கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.
இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை! மருமகளின் காதை கடித்து குதறிய மாமியாரின் வெறிச்செயல்
இந்த நிலையில், ஆள் மாற்றி நந்தகுமார் என்பவரை வெட்டிய விவகாரத்தில் தற்போது ஆறு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இளையராஜா, துரைராஜ், ஹரிஹரன், சிற்றரசன், மணி தேவா, தோனி ஆகியோர் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். முன்பகை காரணமாக கொலை செய்யத் திட்டமிட்டிருந்தபோது, ஆள் மாற்றி சம்பந்தமே இல்லாதவரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: இனி ஆன்லைனில் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்! தமிழக அரசின் புதிய திட்டம்...