×
 

அடுத்த 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை! லிஸ்ட்ல உங்க ஊரும் இருக்கா? வானிலை மையம் அப்டேட்!

'தமிழகத்தில் சில இடங்களில், அடுத்த ஆறு நாட்களுக்கு, இடி, மின்னலுடன் லேசான மழையும்; இன்று எட்டு மாவட்டங்களில், கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு (மே 7 வரை) இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று (மே 1) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மையம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு மற்றும் காக்காச்சி பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பெய்தது. வளிமண்டலத்தில் தெற்கு ஒடிஷா முதல் மன்னார் வளைகுடா வரை ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதால் இந்த மழை வாய்ப்பு உருவாகியுள்ளது.

நாளை நீலகிரி, கோவை, திருப்பூர் மலைப் பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: கோடையை குளிர்விக்க.. ஜில்லென மாறப்போகும் தமிழகம்..!! எந்தெந்த மாவட்டங்களில் மழை தெரியுமா..??

இதேவேளையில், மே மாதத்துக்கான வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் இயல்பைவிட வெப்ப அலை அதிகம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், கோடை மழை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 107.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருச்சி 104.18, சென்னை மற்றும் மதுரை 104, திருப்பத்தூர் 103.28, தர்மபுரி 102.56, ஈரோடு 102.2 டிகிரி வரை வெப்பம் நிலவியது.

வானிலை மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை பெய்யும் பகுதிகளில் மின்னல் தாக்குதல் அபாயம் இருப்பதால், வெளியில் செல்லும்போது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் வெளியில் பணியாற்றுபவர்கள் மழை, இடி மற்றும் வெப்ப அலைக்கு ஏற்றவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: மே 1ல் 6 மாவட்டம். மே 2ல் 8 மாவட்டம்!! அடித்து ஊற்ற காத்திருக்கும் மழை!! வெதர் அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share