×
 

செந்தில் பாலாஜியை டார்கெட் செய்கிறாரா விஜய்? திருமா கடும் தாக்கு...!

செந்தில் பாலாஜியை விஜய் டார்கெட் செய்கிறாரா என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் தான் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சனங்களை முன் வைத்தனர்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயின் கருத்து அரசியல் நேர்மையற்றது என திருமாவளவன் தெரிவித்தார். விஜயின் அரசியல் ஆபத்தானது என்றும் அது அவருக்கே நல்லதல்ல என கூறினார். கூட்ட நெரிசலுக்கு உள்ளூர் அரசியல்வாதிகள் காரணம் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குற்றம் சாட்டி இருந்த நிலையில் திருமாவளவன் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய் செய்தது தவறு.. நின்னு போராடி இருக்கணும்... அதிமுக எம்.பி.யின் SUDDEN ரியாக்ஷன்...!

விஜயின் பேச்சு சுயமாக பேசியதாக தெரியவில்லை என்றும் மற்ற மாவட்டங்களில் பாதுகாப்பு கொடுத்த காவல்துறை கரூரில் பாதுகாப்பு அளிக்கவில்லையா என்றும் கேள்வி எழுப்பினார். செந்தில் பாலாஜியை மட்டும் விஜய் குறி வைக்கிறாரா என கேள்வி எழுப்பினார். விஜயுடன் தொடர்பில் இருப்பவர்கள் அனைவரும் சங் பரிவார்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் என கூறினார்.

இதையும் படிங்க: கரூர் சம்பவத்தில் பாதுகாப்பு குறைபாடா? ஆதாரத்துடன் அமுதா IAS கொடுத்த விளக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share