“முருக பக்தர்கள் மனதை புண்படுத்தாதே...” - அமைச்சர் சேகர் பாபுவுக்கு நேரடி எதிர்ப்பு... திருப்பரங்குன்றம் மக்கள் எடுத்த திடீர் முடிவு...!
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத் தூணில் கிராம மக்கள் தீபம் ஏற்ற கோரி திருப்பரங்குன்றம் வழக்கறிஞர் பாலு தலைமையில் 50 பேர் கொண்ட குழுவினர் மயில் மண்டபத்தில் உண்ணாவிரதத்தை தொடங்கினர்
திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் மயில் மண்டபம் அருகே சாலையில் அமர்ந்து. திருப்பரங்குன்றம் கிராம மக்கள் சார்பாக தீபத்தூணில் விளக்கு ஏற்ற கோரி உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் கிராம மக்கள் சார்பாக ஏற்ற கோரி திருப்பரங்குன்றம் கிராம மக்கள் சார்பாக உண்ணா விரதப் போராட்டம் நடத்த திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் அனுமதி கூறினார். ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் பாலு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கில் நேற்று முன்தினம் நீதிமன்றம், போராட்டம் காலை 9 மணி முதல் 5 மணி வரை நடக்க வேண்டும், 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி, எந்த கோஷங்களும் எழுப்பக்கூடாது. மந்திரங்கள் மட்டுமே உச்சரிக்க வேண்டும், எந்த ஒரு தனி நபருக்கும் அல்லது குழுவிற்கோ எதிராக ஆத்திரமூட்டம் கோஷங்கள் அனுமதி இல்லை. ஒரு மைக் மட்டுமே பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட 18 வழிகாட்டு விதிமுறைகளுடன் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி இன்று திருப்பரங்குன்றம் மயில் மண்டபத்தில் 50 பேர் கொண்ட கிராமத்தினர் மட்டும் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர் பாலு தலைமையில் 11 பெண்கள் உள்பட 50 பேர் கொண்ட கிராம மக்கள் தற்போது மயில் மண்டபம் அருகே உண்ணாவிரதப் பந்தல் அமைத்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும் உண்ணாவிரத பந்தலின் அருகே ஏராளமான கிராம மக்கள் கூடி உள்ளனர். திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் 60க்கும் மேற்பட்ட போலீசார்ரியை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING ”மறுபடியும் உத்தரவிட்டும் கேட்கலையா?” - தமிழக அரசின் தலையில் ஓங்கி கொட்டிய ஜி.ஆர்.சுவாமிநாதன்... நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு...!
“மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டாம்”, “திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம்”, “தமிழக அரசே இந்து அறநிலையத்துறையே முருக பக்தர்கள் மனதை புண்படுத்தாதே”, போன்ற பதாகைகள் ஏந்தியவாறு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் கந்த சஷ்டி கவசம் பாடலை பாடிக்கொண்டே உண்ணாவிரதம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING திருப்பரங்குன்றம் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... “CISF வீரர்களை அழைத்ததில் தவறில்லை” - தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்...!