திமுக பிரமுகரை அடி வெளுத்த வட இந்திய தொழிலாளர்கள் திருப்பூரில் நடந்தது என்ன?
சாலையோரம் நின்று பேசுமாறு திட்டியதால் ஆத்திரமடைந்த பீகார் மாநில தொழிலாளர்கள் திமுக நிர்வாகியை அரிவாள் கொண்டு தாக்கியதில் படுகாயம் அடைந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் இதில் திருப்பூர் ஒன்றாவது வார்டு இ எஸ் ஐ மருத்துவமனை பின்புறம் உள்ள இந்திரா நகர் பகுதியில் 2000க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சிலர் இன்று இந்திரா நகர் பகுதியில் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக வந்த வேலம்பாளையம் பகுதி கழக நெசவாளர் அணி அமைப்பாளர் ஜெகதீஷ் என்பவர் சாலையோரம் நின்று பேசுமாறு கூறியுள்ளார் மேலும் அவர்களை அநாகரிகமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கேட்ட தொழிலாளர்கள் தங்களுக்கும் தமிழ் தெரியும் என் திட்டுகிறீர்கள் என கேட்டதாகவும் இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி ஜெகதீஷ் அவர்களை தாக்கியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் அருகில் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்திற்கு சென்று தங்கள் சக தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியே வந்து ஜெகதீசன் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் கொண்டு ஜெகதீஷ் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் தலையில் இரண்டு இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் ஜெகதீசுக்கு உதவ முன் வந்ததை தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதையும் படிங்க: திமுக மீது வீண்பழி..! அதிமுகவுடன் கூட்டணி முயற்சியா..? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!
இரண்டு பேரை மட்டும் பிடித்த பொதுமக்கள் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேலும் இரண்டு பேர் என மொத்தம் நான்கு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ஜெகதீஷ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் தொடர்பான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் தமிழ்நாட்டு இளைஞர் மீது வட மாநில இளைஞர்கள் அரிவாள் கொண்டு தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக வீடியோகாட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது பகுதியில் பெண்கள் குழந்தைகள் வெளியே நடமாட முடியாத சூழல் நிலவுவதாகவும் வட மாநில தொழிலாளர்களை தங்கள் பகுதியில் இருந்து வெளியேற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசியல் நாகரீகம்..! நேரில் வந்த முதல்வர் விஜய்..! திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!!