×
 

அரசியல் நாகரீகம்..! நேரில் வந்த முதல்வர் விஜய்..! திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!!

விஜயின் அரசியல் நாகரீகம் என்று தன்னை நேரில் வந்து சந்தித்தது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.

முதல்வர் விஜய் மரியாதை நிமித்தமாக தன்னை சந்தித்தார் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சர் ஆன ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றிய தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 120 எம்.எல்.ஏ.க்கள் என்ற பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். முதலமைச்சர் ஜோசப் விஜயை வாசலில் கட்டி அணைத்து வரவேற்றார் திமுக தலைவர் ஸ்டாலின். முதலமைச்சரின் விஜயை கட்டியணைத்து கைபிடித்து அழைத்துச் சென்றார். தொடர்ந்து முதலமைச்சர் விஜய்க்கு சால்வை அணிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்தினார்.

அதன் பிறகு முதலமைச்சர் விஜய் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்தார். தொடர்ந்து பூங்கொத்து கொடுத்தார். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் முதல்வர் விஜய்க்கு நினைவு பரிசு கொடுத்து வரவேற்றார். முதல்வர் விஜயின் இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இதையும் படிங்க: வைகோவிடம் வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்..! பட்டுத்துண்டு அணிவித்து வரவேற்ற எம்பி துரை வைகோ..!

ஏனென்றால் பேரறிஞர் அண்ணாவுக்கு அடுத்ததாக வெற்றி பெற்றவுடன் அரசியல் கட்சியை தலைவர்களை மரியாதை நிமித்தமாக விஜய் சந்தித்து வருகிறார். நாகரீக அரசியல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்தி உள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அரசியல் நாகரிகத்துடன் தன்னை சந்தித்து வாழ்த்த பெற்றதாக தெரிவித்துள்ளார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த முதல்வர் விஜய்..! ஆரத்தழுவி வரவேற்ற நெகிழ்ச்சி சம்பவம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share