×
 

இன்று வாத்தி ரெய்டு... திக்குமுக்காடும் திருப்பூர்... விஜய் ரோடு ஷோ ஏற்பாடுகள் தீவிரம்...!

திருப்பூர் மாவட்டத்தில் இன்று தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக காவல் துறை தரப்பில் அனுமதியளிக்கப்பட்ட வழித்தடம் மற்றும் நிகழ்ச்சி விபரங்கள்.

இன்று திருப்பூர் மாவட்டத்தில் விஜய் பரப்புரை உறுதி செய்யப்பட்டது. இன்று மாலை 3 மணிக்கு அவிநாசியில் ரோடு ஷோ. இன்று மாலை 4 மணிக்கு பெருமாநல்லூர் நால் ரோடு சிக்னலில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பரப்புரை. அதை தொடர்ந்து பெருமாநல்லூர் - திருப்பூர் சாலையில் பூலுவபட்டி வரை சென்று "U" டர்ன் எடுத்து மீண்டும் பெருமாநல்லூர் நால் ரோடு வரை ரோடு ஷோ.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் நிலையத்தில் செங்கோட்டையன் மற்றும் சத்தியபாமா இருவரும் நேற்று இரவு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் அசோக் கிடம் பேசிய பிறகு இன்று திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு ரோடு ஷோ மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
     
திருப்பூர் மாவட்டத்தில் இன்று தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக காவல் துறை தரப்பில் அனுமதியளிக்கப்பட்ட வழித்தடம் மற்றும் நிகழ்ச்சி விபரங்கள்.

தவெக தலைவர் விஜய் இன்று கோவை விமான நிலையத்திலிருந்து கொச்சின் - சேலம் ஆறுவழிச் சாலை மார்க்கமாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி பைபாஸ் சாலையில் திருப்பூர் சாலை சந்திப்பிலிருந்து இன்று மாலை 3 மணிக்கு துவங்கி அவிநாசி புதிய பேரு நிலையத்தில் "U" டர்ன் எடுத்து மீண்டும் அதே வழியிலேயே பைபாஸ் திருப்பூர் சாலை சந்திப்பு வரை ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தொடர்ந்து கொச்சின் - சேலம் ஆறுவழிச்சாலை வழியாக பெருமாநல்லூர் சென்று அங்கு நான்கு ரோடு சந்திப்பில் மாலை 4 மணிக்கு வாகனத்தில் இருந்தபடி எட்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.

இதையும் படிங்க: 45 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு..! தி.நகர் தவெக வேட்பாளர் ஆனந்த் வாக்குறுதி..!!

அதை தொடர்ந்து பெருமாநல்லூர் - திருப்பூர் சாலையில் பூலுவபட்டி வரை சென்று "U" டர்ன் எடுத்து மீண்டும் பெருமாநல்லூர் நால் ரோடு வரை ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.      பின்னர் சேலம் - கொச்சின் ஆறுவழிச்சாலை வழயாக கோவை விமான நிலையம் செல்கிறார். விஜய் நிகழ்ச்சிக்கு அனுமதியளித்த போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விசிலு ஜெயிக்கணும்..! செங்கோட்டையனுக்கு ஆதரவாக மருமகள், பேரன் தீவிர வாக்கு சேகரிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share