×
 

திருத்தணி முருகன் கோயிலில் திடீர் மாற்றம்... மீண்டும், மீண்டுமா? என புலம்பும் பக்தர்கள்... நடந்தது என்ன?

திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் நாள்தோறும் ஒரு அறிவிப்புகள் திடீரென வெளியிடுவதால் பக்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் திருத்தணி முருகன் கோவிலில் செல்போன் கவுண்டர்கள் திறப்பு. இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் இலவச செல்போன். கவுண்டர் திறப்பு

தமிழக முழுவதும் 52 இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. 

ஒரு செல்போன் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் அறிவிப்பானதை அறிவித்திருந்தார்.  இதைத் தொடர்ந்து கடந்ந 1ஆம் தேதி முதல் இந்த பணிகள் ஆனது தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஐந்து ரூபாய் கட்டணம் வசூலுக்கு பக்தர்கள் மத்தியில் பல்வேறு கண்டனங்கள் இருந்ததை தொடர்ந்து ஒரு சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.

இதையும் படிங்க: தமிழகத்தில் 3 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்: தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவு!

இந்நிலையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் செல்போன் கவுண்டர் கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டு இருந்தது. பக்தர்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து கோவிலுக்குள் கொண்டு செல்லலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

 இதைத் தொடர்ந்து செய்தி வெளியானதால் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் திருத்தணி முருகன் ஆலயத்தில் இலவசமாக செல்போன் வைத்து செல்லலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டனர். 

தற்பொழுது இலவச செல்ஃபோன் திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் நாள்தோறும் ஒரு அறிவிப்புகள் திடீரென வெளியிடுவதால் பக்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சட்டசபை அனுமதியின்றி ரூ.2000 கோடி சாலைப் பணிகள்: எ.வ.வேலு மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share