×
 

எல்லாமே பெரியார்தான் என்பவன் எனக்கு ஓட்டு போட வேண்டாம்... சீமான் தடாலடி...!

எல்லாமே பெரியார் தான் என்பவன் எனக்கு ஓட்டு போட வேண்டாம் என சீமான் திட்டவட்டமாக தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது, ஊழல், லஞ்சம் ஒரு பக்கம் என்றால் உண்மை, நேர்மை ஒரு பக்கம் என்றும் இதில் மக்கள் எந்த பக்கம் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், டி.வி, லேப்டாப் என்பதைப் போல் நான் வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் தருவதாக வாக்குறுதி தரலாமா என்ற கேள்வி எழுப்பினார். இலவசம் என்பது வளர்ச்சி திட்டம் இல்லை என்று கூறிய சீமான், அது விழிச்சி திட்டம் என்றும் தேசத்தை நாசமாக்கும் ஒரு திட்டம் இலவசம் என்றும் தெரிவித்தார். இலவசத்திற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்றும் இலவசத்திற்கான பணத்தை வைத்துக்கொண்டு மக்கள் வாழ்வை வளமாக்குங்கள் எனவும் தெரிவித்தார்.

வளர்ச்சியை கொண்டு வந்தால் இலவசமாக நீங்கள் தரும் அனைத்தையும் அவரவர் பணத்தில் வாங்கிக் கொள்வார்கள் என்றும் சீமான் கூறினார். இலவச பயணம் தேவையில்லை என்றும் உலகத்தின் ஆகச் சிறந்த கல்வியை தாருங்கள் என்றும் சீமான் கேட்டுள்ளார். எல்லாமே பெரியார் தான் என்பவன் எனக்கு ஓட்டு போட வேண்டாம் என்றும் நம் முன்னோர்கள் தான் பெரியார் என்பவன் என் பக்கம் வரட்டும் என்றும் சீமான் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆமா, அவர்தான் எங்களுக்கு பிரசவம் பார்த்தாரு... பாஜக பெற்ற பிள்ளைகள் என கூடிய திருமாவுக்கு சீமான் பதிலடி...!

என் இனத்தின் முன்னோர்கள் அனைவரும் பெரியார் தான் என நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் ஊரில் கரகாட்டத்தை பார்க்க கூட கூட்டம் வரும் என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை விமர்சித்து சீமான் பேசியுள்ளார். 

இதையும் படிங்க: அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" ஸ்டிக்கர்... நாம் தமிழர் கட்சியினர் அதிரடி கைது...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share