பள்ளி திறந்த முதல் நாளே பயங்கரம்... திருவண்ணாமலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... அலறியடித்துக்கொண்டு ஓடிய மாணவர்கள்...!
ஒரு மாதமாக விடுமுறை இருந்த நிலையில் பள்ளி கல்வித்துறை பள்ளியை ஆய்வு செய்யவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சுண்ணாம்பு மேடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையலறையில் மத்திய உணவு சமையல் செய்யும்போது எரிவாயு சிலிண்டர் கசிந்து தீடிரென தீப்பற்றி எரிந்ததால் மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசி அடுத்த சுண்ணாம்பு மேடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது இந்த பள்ளியில் சுமார் 33 பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு மாதம் விடுமுறை முடிந்த பிறகு இன்று மாணவர்கள் பள்ளிக்கு வந்த நிலையில் மதிய உணவு சமைப்பதற்காக சமையலற்கள் சிலிண்டரை பற்ற வைத்துள்ளனர்.
அப்போது திடீரென சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது இதனால் பள்ளியில் இருந்த மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். எரிந்து கொண்டிருந்து சிலிண்டரை அணைப்பதற்கு தீயணைப்பான் கருவியை எடுத்து அமைக்கும் போது தீயணைப்பான் கருவியில் எதுவுமே இல்லாமல் ஜீரோவில் இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை
இதையும் படிங்க: அண்ணாமலை ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை! புதிய கட்சி துவக்கம் குறித்து நயினார் நாகேந்திரன் நச் பதில்!
பின்னர் அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக பள்ளிக்குச் சென்று எரிந்து கொண்டிருந்த சிலிண்டரை உடனடியாக10 க்கும் மேற்பட்ட ஈர கோணிப்பகளை போட்டு அணைத்தனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மாணவர்களின் பெற்றோர் பள்ளியின் முன் குவிந்ததாலும், தீயணைப்புத்துறை வாகனத்தில் தீயணைப்புத் துறை வந்தாலும் மேலும் பதற்றம் அதிகரித்தது.
பின்னர் பள்ளி சமையலற்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சிலிண்டர் மீது ஈர துணி போட்டும் மற்றும் தண்ணீரை ஊற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஒரு மாதம் விடுமுறை முடிந்த பிறகு பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்கு முன்பாகவே பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்திருக்க வேண்டும். பள்ளியில் இருக்கும் கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்டவைகளை தரத்தை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும் ஆனால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் எந்த விதமான ஆய்வு செய்யாமல் மெத்தனப்போக்கில் இருந்துள்ளதாக பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: “பாஜக ஒரு செத்த பிணம்... எத்தனை முறை முயன்றாலும்...” - அண்ணாமலையை கடுமையாக விளாசிய கே.பாலாகிருஷ்ணன்...!