×
 

சித்ரா பௌர்ணமி கிரிவலம்..! தி.மலையில் ஏற்பாடுகள் தீவிரம்..!

சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்ரா பௌர்ணமி விழா, லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் மிக முக்கியமான திருவிழாவாக விளங்குகிறது. சித்திரை மாத பௌர்ணமியன்று அண்ணாமலையார் மலையைச் சுற்றி வரும் கிரிவலம் இந்த விழாவின் சிறப்பம்சமாகும். இந்த ஆண்டு 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 9:52 மணிக்கு பௌர்ணமி திதி தொடங்கி, மே 1ஆம் தேதி இரவு 11:08 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

இந்த விழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம், போலீஸ் துறை மற்றும் பல்வேறு துறைகள் இணைந்து விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. கோயில் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.

அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக கோயில் நீண்ட நேரம் திறந்திருக்கும். மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்காக தனி வரிசை ஏற்பாடு செய்யப்படும். விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டு அனைத்து பக்தர்களும் சமமாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.கிரிவலப் பாதையில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மோர், தேங்காய், பால், பிஸ்கட், பழச்சாறு உள்ளிட்ட பானங்கள் மற்றும் உணவு வகைகள் இலவசமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இதையும் படிங்க: தி. மலையில் அதிர்ச்சி சம்பவம்..! 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை..! தொடர் விசாரணை..!!

அன்னதான மையங்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டு, சாது சன்னியாசிகள் உட்பட பக்தர்களுக்கு உணவு பரிமாறப்படும். மருத்துவ உதவிக்காக மொபைல் மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்கும். தீயணைப்பு வாகனங்களும் பாதையில் நிறுத்தப்பட்டிருக்கும். போக்குவரத்து ஏற்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். குடிநீர் வசதி, சித்தர்கள் இளைப்பாறும் இடம், E டாய்லெட் உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. 

இதையும் படிங்க: அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share