×
 

மீண்டும் ஓர் மெரினா புரட்சியா? தூய்மை பணியாளர்களை தேடித் தேடி கைது செய்யும் போலீஸ்…

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த இருந்த தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.

சென்னை மாநகராட்சியின் ராயபுரம் (மண்டலம் 5) மற்றும் திரு.வி.க. நகர் (மண்டலம் 6) பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் கடந்த ஜூலை 16 ஆம் தேதி முதல் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டன. இந்த தனியார்மயமாக்கல் முடிவு, தூய்மைப் பணியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 1 முதல் சுமார் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் 13 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இந்தப் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம், அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவது ஏற்கத்தக்கதல்ல என்றும், போராட்டக்காரர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவு படி தூய்மை பணியாளர்கள் இரவோடு இரவாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் தூய்மை பணியாளர்கள் சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர். இதன் காரணமாக தூய்மை பணியாளர்களை தேடி தேடிச் சென்று குண்டு கட்டாக கைது செய்து வருகின்றனர். தூய்மை பணியாளர்களை தேடி தேடிச் சென்று அவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். உழைப்பாளர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர்.

இதையும் படிங்க: #BREAKING சென்னையில் மீண்டும் உண்ணாவிரதம்... தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது...! 

என்ன நடந்தாலும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தூய்மை பணியாளர்கள் அப்போது திட்டவட்டமாக தெரிவித்தனர். போலீசாரின் கண்காணிப்பை மீறி உழைப்பாளர்களின் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது மட்டுமல்லாது வேறு எங்கேயும் தூய்மை பணியாளர்கள் இருக்கிறார்களா என போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வேலைக்கு வரலனா வேறு ஆட்களை பணியமர்த்துவோம்... ஐகோர்ட்டில் தனியார் நிறுவனம் திட்டவட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share