இதுவரை ₹151.93 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அறிக்கை!
தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை 161.93 கோடி மதிப்பிலான பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல்.
தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி, வாக்காளர்களின் வசதியை மேம்படுத்தவும், வாக்குப்பதிவு அனுபவத்தை எளிதாக்கவும் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள பல்வேறு புதிய முயற்சிகள் குறித்துத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று முக்கியச் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடியை எளிதில் கண்டறியும் வகையில், தகவல் சீட்டில் வாக்காளர் வரிசை எண் மற்றும் பாகம் எண் ஆகியவை தெளிவாகத் தெரியும்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் தங்களது கைபேசிகளைக் கொண்டு வரத் தடையுள்ள நிலையில், அவர்களின் வசதிக்காக வாக்குச்சாவடி நுழைவாயிலிலேயே பாதுகாப்பான வைப்பு வசதி (Mobile Phone Deposit Facility) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புறா கூண்டு' போன்ற பெட்டிகள் அல்லது சணல் பைகள் (Pigeon hole/Jute bags) நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் தங்களது கைபேசிகளை அணைத்து (Switch off), அங்குள்ள தன்னார்வலர்களிடம் ஒப்படைத்துவிட்டுப் பாதுகாப்பாகச் சென்று வரலாம்.
வாக்காளர்களின் அனைத்துத் தேவைகளுக்கும் ஒரே தீர்வாக 'ECINET' என்ற புதிய தளம் மற்றும் செயலியைத் தேர்தல் ஆணையம் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்ட பழைய செயலிகள் (VHA, cVIGIL, Saksham போன்றவை) ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. பெயர் பதிவு செய்தல், முகவரித் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை (EPIC) பதிவிறக்கம், வாக்குப்பதிவு சதவீதத்தை நேரலையில் பார்த்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு உதவிகள். இது Google Play Store மற்றும் Apple App Store-ல் கிடைக்கிறது.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்..!! வாக்காளர் பட்டியலில் இன்னும் பெயர் சேர்க்கலையா..?? 26ம் தேதி தான் கடைசி நாள்..!!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் மாநிலம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், மார்ச் 23, 2026 வரையிலான நிலவரப்படி, மொத்தம் 151.93 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாகத் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் 92.02 கோடி ரூபாய் மதிப்பிற்குப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் 30.53 கோடி ரூபாயும், வாக்காளர்களுக்கு விநியோகிக்கக் கொண்டு வரப்பட்ட இதர இலவசப் பொருட்கள் 22.19 கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை தவிர, 6.47 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் 0.72 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களும் சோதனையில் சிக்கியுள்ளன.
தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா என்ற இலக்கை நோக்கித் தேர்தல் ஆணையம் இத்தகைய கடுமையான அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!