×
 

பிப்.20 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்... அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முக்கிய முடிவு...!

பிப்ரவரி 20ஆம் தேதி வரை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், 2026-27ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் நோக்கத்துடன் இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. அன்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

இதை தொடர்ந்து இடைக்கால வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. துறை ரீதியாக நிதி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதன்பிறகு, வழக்கம்போல சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த நிகழ்ச்சிகளை எடுத்துக்கொள்வது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி, கூட்டத்தொடர் பிப்ரவரி 20ஆம் தேதி வரை நீடிக்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பிப்ரவரி 20ஆம் தேதி 2026-27ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகளும், 2025-26ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுகளுக்கான மானியக் கோரிக்கைகளும் சபையில் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.

இதையும் படிங்க: வேளாண் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு..! பனையில் குட்டை ரகம்... முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..!

இந்தக் கூட்டத்தொடர் மிகக் குறுகிய கால அளவில், அதாவது சில நாட்களுக்கு மட்டுமே நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஏனெனில், வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், இடைக்கால பட்ஜெட் மூலம் தேவையான நிதி ஒதுக்கீடுகளை மட்டும் உறுதி செய்யும் நோக்கமே முதன்மையானது. புதிய அரசு அமைந்த பிறகு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் விவாதம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க: நிதி தர மறுக்கும் மத்திய அரசு..! வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு... தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share