×
 

என்னது 2026ல் விஜய் தான் முதல்வரா..!! படத்தில் வந்த பரபரப்பு போஸ்டர்.. ஷாக்கில் ரசிகர்கள்..!

'யாதும் அறியான்' திரைப்பட ட்ரைலரில் இடம்பெற்ற முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2024 பிப்ரவரி 2ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட கட்சி தான் தமிழக வெற்றிக் கழகம். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற சமத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அரசியல் மாற்றத்தை உருவாக்குவதே இதன் இலட்சியமாகும். இதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய், தீயாய் வேலை செய்து வருகிறார். 

அதிமுக, திமுக காட்சிகள் 2026 தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கியுள்ள நிலையில், தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் வியூகம் அமைத்து வருகிறது. தவெக கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த 4-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. வருகிற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் தான் என்று செயற்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்றும் கூட்டணி குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கியும் ஒருமனதாக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதையும் படிங்க: காங்கிரசை விட கூடுதலை தொகுதி வேணும்..! திமுகவிடம் அடம்பிடிக்கும் விசிக! தலைவலியில் ஸ்டாலின்!

இதனை அடுத்து செயற்குகு கூட்டத்தில் பேசிய விஜய், தவெக தலைமையிலான கூட்டணி திமுக பாஜகவுக்கு எதிரான கூட்டணி தான் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாஜகவின் விஷமத்தனமான செயல்கள் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது என்றும் பாஜகவுடன் கூட்டணி வைக்க தமிழக வெற்றி கழகம் ஒன்றும் திமுக, அதிமுக இல்லை எனவும் கூறினார். திமுகவையும் பாஜகவையும் எதிர்த்து தான் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் என்றும் இது இறுதியான தீர்மானம் அல்ல உறுதியான தீர்மானம் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இளம் இயக்குநர் கோபி இயக்கத்தில் உருவாகியுள்ள 'யாதும் அறியான்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று அதிரடியாக வெளியானது. இந்த திரைப்படத்தின் கதை 2026-ல் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதை குறிப்பதற்காக டிரைலரில் வந்த  காட்சி ஒன்றில், 2026 காலண்டர் இடம்பெற்றுள்ளது. 

மேலும் டீக்கடையில் தொங்கவிடப்பட்ட செய்தித்தாளில் "தமிழகத்தில் இனி இலவசங்கள் கிடையாது - முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்த விஜய் ரசிகர்கள், எங்க அண்ணன் 2026ல் ஆட்சியை பிடிப்பது உறுதி என கொண்டாடி வருகின்றனர். 

சைக்கோ திரில்லர் ஜானரில் உருகவாகியுள்ள இந்த படத்தில் தினேஷ் நாயகனாக அறிமுகமாகிறார். பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தர்ம பிரகாஷ் இசையமைக்க, அப்பு குட்டி, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இதையும் படிங்க: பீகார்ல வேலை இருக்கு! தவெக-வை கழட்டி விட்ட பிரசாந்த் கிஷோர்.. ஆனந்த், ஆதவ்வை நம்பியதால் சிக்கலில் விஜய்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share