“விற்றது 18; மீட்டது 38...” - ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்... வெளியானது அதிர்ச்சி பின்னணி...!
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்க்கள் திருடப்பட்ட வழக்கில், போலீசார் தற்போது மொத்தம் 35 ஹார்ட் டிஸ்க்களை பறிமுதல் செய்துள்ளனர். இது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில், 397 கோடி ரூபாய் மதிப்பிலான மின்மாற்றி டெண்டர் தொடர்பான முக்கிய தகவல்கள் சேமிக்கப்பட்டிருந்த 18 ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போன வழக்கில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர் கோபிநாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
397 கோடி ரூபாய் மதிப்பிலான மின்மாற்றி டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களின் விவரங்கள், டெண்டர் ஆவணங்கள், எந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது, அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலை உள்ளிட்ட முக்கிய தகவல்கள் மின்வாரிய தலைமை அலுவலக கணினிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அலுவலகத்தின் 4, 5, 7 மற்றும் 10-வது மாடிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த கணினிகளில் இருந்த 18 ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. முதலில், 5-வது மாடியில் உள்ள நீர்மின் பிரிவில் உதவி செயற்பொறியாளர் மலர்விழி பயன்படுத்தி வந்த கணினியில் இருந்த ஹார்ட் டிஸ்க் கடந்த மே 18-ஆம் தேதி காணாமல் போனது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பல்வேறு பிரிவுகளில் இருந்து மொத்தம் 18 ஹார்ட் டிஸ்க்கள் மாயமானது தெரியவந்தது.
இதையும் படிங்க: 436 தொலைநோக்கு திட்டங்கள்..! அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன..? அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!!
இந்த திருட்டு சம்பவத்தில், மின்வாரியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்த அரக்கோணத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஒப்பந்த ஊழியர் கோபிநாத் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. உதவி செயற்பொறியாளர் மலர்விழியின் கணினியில் இருந்த ஹார்ட் டிஸ்கை திருடிய பின்னரும், கணினியை ஆய்வு செய்வது போல் நடித்து சந்தேகத்தைத் தவிர்க்க முயன்றதாக கூறப்படுகிறது.
கோபிநாத்தை கைது செய்து விசாரணை நடத்திய போலீசாரிடம், திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்களை பெங்களூருவில் விற்றுவிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சிந்தாதரிப்பேட்டை தனிப்படை போலீசார் அவரை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்று, திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்களை மீட்டதுடன், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரையும் கைது செய்துள்ளனர்.
38 ஹார்ட் டிஸ்குகள் பறிமுதல்:
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்க்கள் திருடப்பட்ட வழக்கில், போலீசார் தற்போது மொத்தம் 35 ஹார்ட் டிஸ்க்களை பறிமுதல் செய்துள்ளனர். இது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்வாரிய தலைமை அலுவலகத்தின் 4, 5 மற்றும் 6-வது மாடிகளில் செயல்பட்டு வந்த அலுவலகங்களில் இருந்து 18 ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போனதாக, கடந்த மாதம் எட்டு அதிகாரிகள் இணைந்து புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில், மின்வாரிய அலுவலக கணினிகளை பராமரித்து வந்த தனியார் நிறுவன ஊழியரான கோபிநாத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருடிய ஹார்ட் டிஸ்க்களை பெங்களூருவில் உள்ள ஒரு கடையில் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று சம்பந்தப்பட்ட கடையில் விசாரணை நடத்தியபோது, கோபிநாத் மொத்தம் 35 ஹார்ட் டிஸ்க்களை விற்றதாக தகவல் கிடைத்தது. பின்னர் அந்த ஹார்ட் டிஸ்க்கள் அனைத்தும் சென்னை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
மின்வாரிய அலுவலகத்தில் இருந்து 18 ஹார்ட் டிஸ்க்கள் மட்டுமே திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக மீட்கப்பட்டுள்ள 17 ஹார்ட் டிஸ்க்கள் எங்கிருந்து வந்தன என்பது தற்போது விசாரணையின் முக்கிய அம்சமாகியுள்ளது.
இதுதொடர்பாக, கோபிநாத்திடம் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மீதமுள்ள ஹார்ட் டிஸ்க்கள் எந்த இடங்களில் இருந்து எடுக்கப்பட்டன, அவை வேறு ஏதேனும் அலுவலகங்கள் அல்லது நிறுவனங்களுடன் தொடர்புடையவையா என்பது குறித்தும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கல்வி முறையை சீரழித்த பிரதமர் மோடி..!! விலை கொடுக்கிறது இந்திய இளம் தலைமுறை..!! ராகுல் காந்தி சாடல்..!!