×
 

ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்... பின்னணியில் இருந்தது யார்?... வெளியானது பகீர் உண்மை...!

தமிழ்நாடு மின்வாரிய ஹார்ட் டிஸ்க் திருட்டு வழக்கு: மேலும் ஒருவர் கைது

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்கள் திருடப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

397 கோடி ரூபாய் மதிப்பிலான மின்மாற்றி டெண்டர் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் தரவுகள் சேமிக்கப்பட்டிருந்த 18 ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போனதாக மின்வாரிய அதிகாரிகள் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மின்வாரிய அலுவலக கணினிகளை பராமரித்து வந்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியரான கோபிநாத் கைது செய்யப்பட்டார். ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தத்தின்கீழ் பணியாற்றி வந்த அவர், மின்வாரிய அலுவலகம் மட்டுமின்றி பல்வேறு அலுவலகங்களில் இருந்தும் கணினி உபகரணங்களை திருடியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: “விற்றது 18; மீட்டது 38...” - ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்... வெளியானது அதிர்ச்சி பின்னணி...!

கோபிநாத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் பிற கணினி உபகரணங்களை பெங்களூருவில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகள் மற்றும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை விரிவுபடுத்தப்பட்டது.

பின்னர் பெங்களூருவுக்கு சென்ற தனிப்படை போலீசார், கோபிநாத்திடம் இருந்து திருடப்பட்ட பொருட்களை வாங்கியதாகக் கூறப்படும் முரளி மனோகர் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 34 ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் 20 ரேம் (RAM) மெமரி சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, மின்வாரிய அலுவலகத்தில் இருந்து 18 ஹார்ட் டிஸ்க்கள் மட்டுமே திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், மொத்தம் 35 ஹார்ட் டிஸ்க்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால், கூடுதலாக மீட்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் கணினி உபகரணங்கள் எந்த அலுவலகங்களில் இருந்து திருடப்பட்டவை என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோபிநாத் மற்றும் முரளி மனோகரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதுடன், திருடப்பட்ட பொருட்கள் வேறு எந்த இடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டன, இதில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: கே.என்.நேரு மீது எஃப்ஐஆர் பதியப்பட்டது எப்படி? சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share