இனிமே கிடையாது... தனியார் பள்ளி ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம்... தமிழக அரசு கறார்..!!
தனியார் பள்ளியில் ஒழுங்குமுறை விதிகளில் தமிழக அரசு திருத்தம் மேற்கொண்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் தனியார் பள்ளிகளின் ஒழுங்குமுறை விதிகளில் முக்கியமான திருத்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்தத் திருத்தத்தின் மூலம், தனியார் பள்ளிகளில் அரசியல் அல்லது மதம் சார்ந்த பிரிவினையைத் தூண்டக்கூடிய நிகழ்ச்சிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி நோக்கங்களுடன் நேரடியாகத் தொடர்பில்லாத எந்தவொரு நிகழ்வுகளையும் நடத்துவதற்கு தடை போடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு உத்தியாக அமலுக்கு வந்துள்ளது. பள்ளிகள் கல்வி மட்டுமே மையமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கை உள்ளது. பள்ளி வளாகங்கள் அரசியல் பிரச்சாரங்கள், மதப் பிரசாரங்கள் அல்லது சமூகப் பிரிவினையை ஏற்படுத்தும் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படக் கூடாது என்பதை அரசு வலியுறுத்துகிறது. கடந்த காலங்களில் சில தனியார் பள்ளிகளில் அரசியல் கட்சிகள் சார்பிலான நிகழ்வுகள், மத அமைப்புகளின் கூட்டங்கள் அல்லது பிரிவினைக்கு வழிவகுக்கும் வகையிலான நிகழ்ச்சிகள் நடைபெற்ற சம்பவங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இத்தகைய செயல்பாடுகள் மாணவர்களிடையே சமூக ஒற்றுமையைப் பாதிக்கும், கல்விச் சூழலை மாசுபடுத்தும் என்ற கருத்து நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்த விதித் திருத்தத்தின் மூலம், தனியார் பள்ளிகள் இனி முறையாக கல்வி சார்ந்த நிகழ்வுகள், விளையாட்டு, கலை, அறிவியல் கண்காட்சிகள், பாடத்திட்டத்துடன் தொடர்புடைய பயிற்சிகள் போன்றவற்றை மட்டுமே நடத்த முடியும்.
இதையும் படிங்க: போலீஸ் வண்டியால்தான் விஜய் ஊர்வலத்தில் விபத்தா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!!
அரசியல் தலைவர்களின் பேச்சு நிகழ்ச்சிகள், மதக் கூட்டங்கள், சாதி அல்லது மத அடிப்படையிலான கொண்டாட்டங்கள், பிரசார நிகழ்வுகள் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. இதனால், பள்ளிகளின் நிர்வாகிகள் மீது கடுமையான பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. விதிமீறல் ஏற்பட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படுதல், அபராதம் அல்லது பிற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் உள்ளது.
இதையும் படிங்க: ஹாப்பி நியூஸ்... வாகனங்களின் தகுதி சான்றிதழ் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு..! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!