×
 

போதைப்பொருள் புழக்கத்தை கண்டறிய ரகசிய நெட்வொர்க்..! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!

போதைப்பொருள் புழக்கத்தை கண்டறிய ரகசிய நெட்வொர்க் ஏற்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரிசையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் ஆணையர் இது தொடர்பாக துணை மற்றும் உதவி ஆணையர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். முதலமைச்சர் விஜய் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஏற்கெனவே கல்வி நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது, பாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலிக்கக்கூடாது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இந்தப் பின்னணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க புதிய உத்தரவுகள் வெளியாகியுள்ளன. சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள் மற்றும் பேருந்துகளில் தொடர்ச்சியான சோதனைகளை நடத்த வேண்டும். போதைப்பொருள் பழக்கத்தை கண்டறிய ரகசிய நெட்வொர்க் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மக்களை அமர வைக்கனும்..! சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!

டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அரசு அனுமதித்த நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராய விற்பனைக்கு வாய்ப்புள்ள இடங்களை கண்காணிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் மற்றும் FL2, FL3 பார்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குழம்பிய மக்கள்..! கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தமா..? தமிழக அரசு கொடுத்த விளக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share