தெருக்களின் சாதிப் பெயர் நீக்கம்... தமிழக அரசுக்கு சிக்கல்... தலையில் ஓங்கிக் கொட்டிய நீதிமன்றம்....!
1978 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் உள்ள சாலைகள் தெருக்களின் பெயர்களில் சாதியப் பெயர்களை நீக்க தமிழக அரசு பிறப்பித்த அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி வழக்கு. ஜாதிப் பெயர்கள் நீக்குவது குறித்து 1978 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு தரப்பில் பதில் பதில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரை சேர்ந்த பரமசிவம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் குடியிருப்புகள்ui, தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு உள்ள சாதிப் பெயர்களை நீக்க அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற
சாதிப்பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19ம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறையில் பல பிரச்சனைகள் உள்ளது எனவே இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும என்ன மனுவில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: விஜய் திரையில்தான் சூப்பர் ஸ்டார்; அரசியலில்? தவெக குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே கே ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. குறிப்பிட்ட காலத்திற்குள் ஒவ்வொரு பணிகளும் முடிக்க வேண்டும் என்பது வழிகாட்டு நெறிமுறைகளே ஆகும் . அலகாபாத் , பிராக்யராஜ் என மாற்றப்பட்டுள்ளது.எனவே இந்த அரசாணையை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவில், நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால் இந்த அரசாணையில் குறைபாடுகள் உள்ளது.நடைமுறை படுத்துவதில் பல சில கேள்விகள் எழுகிறது. அதை எவ்வாறு சரி செய்வீர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், ஜாதிப் பெயர்கள் நீக்குவது குறித்து 1978 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையில் அடிப்படையில் , என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்பது குறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 23ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்
இதையும் படிங்க: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஓரவஞ்சனை பட்ஜெட்! நாடாளுமன்றத்தில் திருமாவளவன் கடும் சாடல்!