×
 

விஜய் திரையில்தான் சூப்பர் ஸ்டார்; அரசியலில்?  தவெக குறித்து எடப்பாடி பழனிசாமி  விமர்சனம்!

தவெக இன்னும் ஒரு தேர்தலைக் கூடச் சந்திக்கவில்லை; எம்.ஜி.ஆர் பெயரைச் சொன்னால்தான் அரசியலே நடத்த முடியும் என சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே (India Today) வட்டமேஜை மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற இந்தியா டுடே வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தாக்கம் குறித்து எழுப்பப்பட்டக் கேள்விகளுக்குத் தனது பாணியில் அதிரடியாகப் பதிலளித்தார்.

விஜய் திரையில் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கலாம், அதற்காக அரசியலிலும் உடனே சூப்பர் ஸ்டாராகி விட முடியாது. சினிமா வேறு, அரசியல் வேறு. அவர் இன்னும் ஒரு தேர்தலைக் கூடச் சந்திக்கவில்லை. தேர்தல் களத்தில் இறங்கி மக்கள் அளிக்கும் வாக்குகளைப் பெற்றால்தான், ஒரு கட்சிக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பது தெரியவரும். அதுவரை வெறும் கூட்டத்தை வைத்து எதையும் கணித்துவிட முடியாது.

தமிழகத்தில் யார் அரசியல் கட்சித் தொடங்கினாலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லாமல் அரசியல் நடத்த முடியாது. எம்.ஜி.ஆரின் நல்லாட்சியைத் தருவோம் என்று சொன்னால்தான் மக்களிடம் அவர்கள் நெருங்கவே முடியும். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் செதுக்கிய இயக்கம்தான் அதிமுக. எத்தனையோ பேர் கட்சித் தொடங்கி மறைந்துவிட்டார்கள்; ஆனால் அதிமுக இன்றும் ஆலமரமாக நிற்கிறது. சமீபகாலமாக ஒரு சிறியச் சம்பவம் நடந்தால் கூடத் தலைவர் விஜய் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுகிறார். ஒரு அரசியல் தலைவருக்குத் துணிச்சலும், மக்களோடு மக்களாகக் களத்தில் நிற்கும் குணமும் அவசியம். நாட்டில் என்ன நடக்கிறது, எந்தக் கட்சி எதனுடன் கூட்டணி வைத்திருக்கிறது என்பது கூடத் தெரியாமல் ஒரு கட்சித் தலைவராக இருப்பது வியப்பாக உள்ளது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுகவை வீழ்த்த விஜய் ஒருவரால் தான் முடியும்! சேலத்தில் செங்கோட்டையன்  பேட்டி!

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலானக் கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், எந்தப் புதிய சக்திகளாலும் அதிமுக-வின் வாக்கு வங்கியைக் குலைக்க முடியாது என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 70 நாட்களில் தெருநாய் பிரச்சினை தீரும்! தவெக கருத்து கேட்பு கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் உறுதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share