"வெற்றிப் பயணத் திட்டம்"..! ZERO TICKKET... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட போக்குவரத்து துறை..!!
வெற்றி பயண திட்டத்திற்கான வழிகாட்டு நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வெற்றிப் பயணத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மகளிர் காண வெற்றிப் பயணம் திட்டம் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் அமலில் உள்ளது. மாநகர, நகர்ப்புற சாதாரண சேவைகளுடன் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ், புறநகர் சாதாரண மற்றும் மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளிலும் மகளிர், சிறுமியர் மற்றும் திருநர்கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம். வருமான உச்சவரம்பு இல்லை.
பயண எண்ணிக்கைக்கும் கட்டுப்பாடு இல்லை.திட்டத்தை சீராகவும் ஒரே மாதிரியாகவும் நடைமுறைப்படுத்த பதினேழு அம்சங்கள் கொண்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியான சேவைகள் மின்னணு டிக்கெட் இயந்திரங்களுடன் இணைக்கப்பட வேண்டும். ஜீரோ டிக்கெட் உருவாக்கம் முன்கூட்டியே சோதிக்கப்பட வேண்டும். இயந்திரம் பழுதாகினால் மாற்று ஏற்பாடு செய்து வழங்கல் தடைப்படாமல் தொடர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பேருந்துகளில் வெற்றிப் பயணம் என்ற வாசகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கர் இடம்பெற வேண்டும். பணியாளர்களுக்கு விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.மகளிர் மற்றும் திருநர் பயணிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது. ஒவ்வொரு தகுதியான பயணத்திற்கும் ஜீரோ டிக்கெட் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். நகர சாதாரண சேவைகளைத் தவிர பிற சேவைகளில் ஏறும் இடம் மற்றும் இறங்கும் இடம் விவரங்கள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். இயந்திரம் செயலிழந்தால் கையால் எழுதப்பட்ட ஜீரோ டிக்கெட் வழங்கி விவரங்களைப் பதிவேட்டில் குறிக்க வேண்டும்.
இதையும் படிங்க: சூரியசக்தி மானிய திட்டம்..! மத்திய அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு..!!
ஜீரோ டிக்கெட், பயணிகள் எண்ணிக்கை, கணக்கீடு மற்றும் பதிவுகள் அனைத்தும் ஒத்துப்போக வேண்டும்.பயணம் தமிழ்நாட்டிற்குள் இருந்தால் மட்டுமே சலுகை பொருந்தும். புகார்களை 149 என்ற எண் மூலம் பதிவு செய்யலாம். களக் கண்காணிப்பு, பேருந்து பராமரிப்பு, அட்டவணைப்படி இயக்கம் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களின் ஊழல் சொத்துகள் பறிமுதல்... சட்டத் திருத்தம் கொண்டு வாங்க..! கோர்ட் அறிவுறுத்தல்..!!