கனிமவளத் தடை விவகாரம்..!! தொடரும் சிக்கல்... நீதிமன்றத்தை எட்டிய பிரச்சனை..!
கனிம வளத்தடை விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
கனிம வளங்கள் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்து தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக அரசு, மாநிலத்தின் உள்நாட்டு கட்டுமானத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இருந்து அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றுக்கு ரஃப் ஸ்டோன் (கற்கள்), எம்.சாண்ட், மெட்டல் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு தடை விதித்தது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.
புதுச்சேரி மட்டும் இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த முடிவு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் எடுக்கப்பட்டது. மாநில உள்நாட்டு தேவை அதிகரித்துள்ள நிலையில், ஏற்றுமதியால் செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
விலை உயர்வு, சுற்றுச்சூழல் பாதிப்பு, சட்டவிரோத சுரங்கங்கள், சாலை விபத்துகள் ஆகியவை அதிகரிக்கும் என அரசின் வாதமாக முன் வைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை பல தரப்பினராலும் வரவேற்கப்பட்டது.
இதையும் படிங்க: புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழ்நாடு.. 4 சர்வதேச நிறுவனங்களுடன் முக்கிய ஒப்பந்தம்!
கேரளா முதலமைச்சர் வி.டி. சதீசன், தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி, தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு பணிகளுக்கு தேவையான கனிம வளங்களுக்கு விலக்கு அளிக்குமாறு கோரிக்கை வைத்தார். இருப்பினும், தமிழக அரசு தன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியது. கன்னியாகுமரியைச் சேர்ந்த லிபின் பொன்னுசாமி லீலா என்பவர், இந்தத் தடை உத்தரவை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: தனியார் மயமாகிறதா காலை உணவு திட்டம்..? வைரலாகும் தகவல்..! தமிழக அரசு விளக்கம்..!!