×
 

அரங்கம் அதிர... "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" நிகழ்ச்சி கோலாகல தொடக்கம்...!

கல்வியில் சிறந்த தமிழ்நாடு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இந்த நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் கருப் பொருளில் கொண்டாடப்படும் இந்த விழாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்று திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

இதையும் படிங்க: கூடுதல் தொகுதி விவகாரம்... பசிக்கு சோறு கேட்பது தவறா?... கே.எஸ்.அழகிரி கேள்வி..!

இந்த நிலையில், 2025-26 கல்வி ஆண்டிற்கான புதுமைப் பெண் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் தொடக்க விழா தொடங்கியுளளது. கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும் சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இந்த விழாவானது 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. முதல் பகுதியாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இடம் பெறும். அதனைத் தொடர்ந்து நான் முதல்வன், விளையாட்டுச் சாதனையாளர்கள், புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன் மற்றும் அரசுப் பள்ளிகளில் இருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற சாதனையாளர்கள் ஆகிய அரங்கங்கள் என நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கல்வி வரலாற்றில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது நான் முதல்வன் திட்டம். 

 இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.

இதையும் படிங்க: சென்னை ஒன் செயலி மூலம் டிக்கெட் எடுக்குறீங்களா? ரயில்வே துறையின் அதி முக்கிய அறிவிப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share