வாட்ஸ் அப்பில் அரசு சேவைகள்..!! இனி உட்கார்ந்த இடத்தில் இருந்தே வேலைய முடிச்சிடலாம்..!!
நம்ம அரசு என்ற வாட்ஸ் அப் சேவை வாயிலாக அரசின் பெரும்பாலான சேவைகளை நாம் இருக்கும் இடத்திலெயே பெற்று கொள்ளலாம்.
அரசு சான்றிதழ்களை பெறுவதற்காக அலுவலகங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய காலம் முடிவுக்கு வருகிறது. தமிழ்நாடு அரசு, வாட்ஸ்அப் நிறுவனத்துடன் இணைந்து புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 'நம்ம அரசு' எனும் இந்த வாட்ஸ்அப் சாட்பாட் மூலம், 50க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை மக்கள் வீட்டிலிருந்தபடியே பெறலாம். இதனால், நேர விரயம் தவிர்க்கப்பட்டு, சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் கிடைக்கும்.
பொதுமக்கள் இனி வருவாய் துறை சார்ந்த சான்றிதழ்களான பிறப்பு, இறப்பு, வருமானம், சாதி உள்ளிட்டவற்றை வாட்ஸ்அப்பில் இருந்து பெற முடியும். இதற்காக, 78452 52525 என்ற எண்ணை தங்கள் மொபைலில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணுக்கு 'வணக்கம்' அல்லது 'ஹாய்' என குறுஞ்செய்தி அனுப்பினால், உடனடியாக 'select department' என்ற இணைப்பு வரும். அதைத் தட்டினால், பல்வேறு அரசுத் துறைகளின் சேவை பட்டியல் தோன்றும்.
இதையும் படிங்க: அனல் பறக்கும் தேர்தல் களம்... வரும் 23ல் பிரதமர் மோடி மதுரை வருகை...!
தேவையான துறையைத் தேர்ந்தெடுத்து, தேவையான விவரங்களை உள்ளிட்டு, ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம். சான்றிதழ் உடனடியாக வாட்ஸ்அப்பிலேயே பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும். இந்த சேவைக்கு இ-சேவை மையங்களில் டோக்கன் வாங்கி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசு அலுவலகங்களுக்கு பல நாட்கள் அலைந்து திரிய வேண்டியதும் இல்லை.
வேலைக்கு விடுப்பு எடுக்காமல், பள்ளி அல்லது கல்லூரிக்கு இடைவெளி விடாமல், உட்கார்ந்த இடத்திலிருந்தே அனைத்தும் நடக்கும். இதன் மூலம், மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதும், அரசு சேவைகளை விரைவாக வழங்குவதும் அரசின் நோக்கமாக உள்ளது.
சென்னையில் நடைபெற்ற தொடக்க விழாவில், வாட்ஸ்அப் இந்தியா தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் பேசுகையில், "இந்த சேவை மூலம் அரசு சான்றிதழ்கள் மிக எளிதாகவும், காலதாமதம் இன்றியும் மக்களுக்கு கிடைக்கும். இது மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்" என்றார்.
தமிழக அரசும் வாட்ஸ்அப் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. விரைவில் இந்த சேவையுடன் மேலும் பல துறைகளின் சேவைகள் இணைக்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சி, டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. மக்கள் இந்த வாட்ஸ்அப் எண்ணை பயன்படுத்தி, அரசு சேவைகளை வசதியாக பெறலாம்.
மொத்தத்தில், "நம்ம அரசு" சேவை தமிழ்நாட்டின் டிஜிட்டல் முன்னேற்றத்தின் ஒரு மைல்கல். இது போன்ற திட்டங்கள் மூலம், அரசு மக்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுகிறது. மேலும் தகவல்களுக்கு, அரசின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த சேவை, வருங்காலத்தில் மேலும் பல துறைகளை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வெளிநாட்டில் பயின்ற மருத்துவப் பட்டதாரிகள்... கோரிக்கையை கேளுங்க... ஆதரவு குரல் கொடுத்த சீமான்..!