×
 

7.5% உள் இடஒதுக்கீடு உயர்வு? ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் புதிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 உள் இடஒதுக்கீட்டை உயர்த்துவது தொடர்பாக நீதியரசர் தலைமையில் புதிய குழு உருவாக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீட்டை உயர்த்துவது தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் விரைவில் புதிய குழு அமைக்கப்படும்" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் பி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை செனாய் நகரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசியக் குடற்புழுத் தொற்றுநோய் தடுப்பு நாள் (National Deworming Day) நிகழ்ச்சியில் அமைச்சர் பி. அருண்ராஜ் நேரில் கலந்துகொண்டு, மாணவர்களுக்குக் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவச் சேர்க்கையில் வழங்கப்பட்டு வரும் 7.5% உள் இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்துவது தொடர்பாக விரிவாக ஆராய, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் புதிய குழு ஒன்று விரைவில் உருவாக்கப்படும்.

இதையும் படிங்க: பரந்தூர் திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு? தயாநிதி மாறன் கேள்விக்கு மத்திய அரசு அளித்த சுவாரஸ்ய பதில்!

ஏற்கனவே 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்த ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையிலான கமிட்டி, ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இக் கோட்டாவை உயர்த்துவது குறித்துத் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு மறுஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

கலையரசன் கமிட்டியின் அந்தப் பரிந்துரையின் அடிப்படையிலும், தற்போதைய தரவுகளின் அடிப்படையிலும் புதிய குழு அமைக்கப்பட உள்ளது. அக் குழு அளிக்கும் விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், 7.5% உள் இடஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்துத் தமிழ்நாடு அரசு விரைவில் உரிய முடிவை எடுக்கும்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: காகிதத்தில் தான் நடவடிக்கை இருக்கா? தெரு நாய் பிரச்சனையில் சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share