×
 

காலையிலேயே வந்தது அலர்ட்... இந்த 10 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை...! 

சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (அக்.18) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில்,  கேரள – கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் நேற்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,   இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. 

இதையும் படிங்க: #weatherupdate: தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... உஷார் மக்களே...!

அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 10 மணி வரை லேசான மழை தொடரும் எனவும், கடலூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, தென்காசியில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்… இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share