TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின.. இணையதளம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்..!
குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், வணிகவரித் துறை துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளர், இந்து சமய அறநிலையத் துறையில் தணிக்கை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி தணிக்கையில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பதவியிடங்கள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன.
இந்த நிலையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது. முதன்மைத் தேர்வு முதல்தாள் தேர்வு கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்றது. முதன்மைத் தேர்வின் இரண்டாவது தாள் பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெற்றது.
இதையும் படிங்க: #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
இந்த நிலையில், குரூப் 2 முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.tnpsc.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அவரு எடுபுடி கோழைச்சாமி.. கோடநாடுன்னு சொன்னாலே தொடை நடுங்குதே! பந்தாடிய அமைச்சர்..!