×
 

உங்க விஜய்.. நான் வரேன்..!! இனி BLAST தான்..!! பெரம்பூர் தொகுதியில் நாளை பிரச்சாரம்..??

தவெக தலைவர் விஜய், வடசென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. நாளை பிரசாரத்தையும் தொடங்க இருக்கிறார்.

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அட்டவணையின்படி, வேட்புமனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற்று, அதே நாளில் முடிவுகளும் அறிவிக்கப்படும். இந்தத் தேர்தலை முன்னிட்டு, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. 

கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு, பிரசார ஏற்பாடுகள், வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றில் கட்சிகள் தங்களது செயல்பாடுகளை வேகப்படுத்தி வருகின்றன. இந்த முறை தமிழ்நாட்டில் நான்கு முனைப் போட்டி நிலவும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. திமுக கூட்டணி, அதிமுக தரப்பு, நாம் தமிழர் கட்சி மற்றும் புதிதாக உருவாகியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகிய நான்கு அணிகளும் தனித்தனியாகப் போட்டியிட உள்ளன. 

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! அடுத்து திருச்சியா..?? விஜய் போடும் மாஸ்டர் பிளான் இதுதான்..!!

234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில், தவெக தலைவர் விஜய் வட சென்னையின் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. பெரம்பூருக்கு அருகிலுள்ள கொடுங்கையூர் பகுதியில் உள்ள கண்ணதாசன் நகரில், விஜய் தங்கி பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஒரு பங்களா வாங்கப்பட்டுள்ளது. நாளை (புதன்கிழமை) காலையில் அந்த பங்களாவில் பூஜை நடைபெற உள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் விஜய், அதே நாளில் பெரம்பூர் தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க இருக்கிறார். இரண்டு நாட்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபடும் விஜய், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கத் திட்டமிட்டுள்ளார். தவெகவின் முதல் கட்ட பிரசார நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுவது உறுதியாகும் பட்சத்தில், அது தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இதுவரை வேட்பாளர்கள் முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது உத்திகளை வலுப்படுத்தி வருகின்றன. தேர்தல் நெருங்கும் வேளையில், கூட்டணி மாற்றங்கள், தொகுதி ஒதுக்கீடு மற்றும் பிரசாரத் தீவிரம் ஆகியவை அரசியல் களத்தை சூடுபிடிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி.. அது அதிமுகவுக்கு சாதகமாக அமையும் ..!! ஒரே போடாக போட்ட ராஜேந்திர பாலாஜி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share