×
 

தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் கோர விபத்து!

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் தேரோட்டத்தின் போது, தேர் சக்கரத்திற்கும் சுவற்றுக்கும் இடையில் சிக்கி இளைஞர் ஹர்ஷ்வர்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உலகப் புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டத்தின் போது, தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்செங்கோடு மலை மீது வீற்றிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பெருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகத் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ மிக பிரம்மாண்டமாகத் தொடங்கி நடைபெற்று வந்தது. கோலாகலமாக நடைபெற்ற இந்தத் தேரோட்டத்தின் போது, ஒரு குறுகலான பகுதியில் தேர் திரும்புகையில் எதிர்பாராத விதமாகப் பெரும் விபத்து நேரிட்டது. தேர் திரும்பிய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், அங்கிருந்த இரண்டு பேர் நிலைதடுமாறி தேர் சக்கரத்திற்கும் அருகில் இருந்த சுவற்றுக்கும் இடையில் மிகக் கொடூரமாகச் சிக்கிக் கொண்டனர்.

இவ்விபத்தில் சிக்கியவர்களை அருகில் இருந்த பொதுமக்களும் போலீஸாரும் உடனடியாக மீட்க முயன்றனர். எனினும், இந்த கோர விபத்தில் ஹர்ஷ்வர்தன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த சஷ்டிகன் (19) என்ற கல்லூரி மாணவர் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டத்தில் இளைஞர் உயிரிழந்த இச்சம்பவம் திருச்செங்கோடு வட்டார மக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல"... நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க.! அமைச்சர் அருண்ராஜ் பேச்சு..!

இதையும் படிங்க: மதுரை பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தவிப்பு! தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share