×
 
☰

”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

பேருந்து பயண வழிதட உணவகங்களில் ஆய்வு செய்த அமைச்சர்.  உணவக உரிமையாளர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் அமைச்சர் எச்சரிக்கை..

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு மற்றும் தனியார் பேருந்து பயணிகளிடமிருந்து உணவுத் தரம் மற்றும் கழிப்பறை சுகாதாரம் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்த புகார்களின் உண்மைத் தன்மையை ஆராய, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேற்று இரவு 9:00 மணியளவில் பெருந்துறை அருகே அமைந்துள்ள பயணவழி உணவகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டார்.

அமைச்சரின் இந்த அதிரடி வருகை உணவக நிர்வாகத்திற்கும், அங்கிருந்த அதிகாரிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆய்வின் போது, உணவக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளுக்குச் சென்ற அமைச்சர், அங்கிருந்த பயணிகளிடம் உணவின் தரம், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்தும், கழிப்பறைகளின் தூய்மைப் பராமரிப்பு குறித்தும் கேட்டறிந்தார்.

பயணிகள் தங்களின் நீண்டநாள் புகார்களை அமைச்சரிடம் நேரடியாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, உணவகத்தின் சமையலறை மற்றும் விற்பனைப் பகுதிகளை அமைச்சர் ஆய்வு செய்தபோது, அங்கு பொதுமக்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் மிகவும் தரமற்ற முறையிலும், சுகாதாரமற்ற சூழலிலும் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையும் படிங்க: 200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

உடனடியாக தரமற்ற உணவுகளை விற்பனை செய்து பயணிகளின் ஆரோக்கியத்தோடு விளையாடக் கூடாது என உணவக உரிமையாளரை கடுமையாக எச்சரித்த அமைச்சர், போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு விதிமீறலில் ஈடுபட்ட அந்த உணவகத்தின் மீது எவ்விதத் தாமதமும் இன்றி சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக Slowly அதிரடி உத்தரவு பிறப்பித்தார்

இதையும் படிங்க: மானிய கோரிக்கை விவாதங்கள் வெறும் அறிக்கைதான்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share