ஆசிரியர்களுக்கான TRB தேர்வு..! காலி பணியிடங்கள்..? தேர்வு அட்டவணையால் பெரும் குழப்பம்..!
காலி பணியிடங்கள் குறித்த விவரம் இல்லாமல் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால் டிஆர்பி தேர்வர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக Teachers Recruitment Board (TRB) என்ற அமைப்பு செயல்படுகிறது. இது தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பு. பள்ளி ஆசிரியர் முதல் கல்லூரி உதவி பேராசிரியர் வரை பல்வேறு நிலைகளில் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு TRB தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுகள் பெரும்பாலும் போட்டித்தன்மை மிக்கவை, ஏனென்றால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆசிரியர் பணியை கனவாகக் கொண்டிருக்கிறார்கள்.
இளநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பதவிக்கு இது நடத்தப்படுகிறது. 2025-இல் சுமார் 1996 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி, தேர்வு செப்டம்பர் 28 அன்று நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, பொருளியல் போன்ற பாடங்களுக்கு தனித்தனியே காலியிடங்கள் இருக்கும்.
TET தேர்வு, பட்டதாரி ஆசிரியர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. குழப்பம் நிறைந்த தேர்வு அறிவிப்பை டிஆர்பி வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டை எழுந்துள்ளது. காலி பணியிடங்களை குறிப்பிடாமல் அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. PG EXAM, ASS. PROF in arts and science college, BEO EXAM உள்ளிட்ட தேர்வுகள் விடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: போர் பதற்றம்..!! ஈரானை ரவுண்டுகட்டிய அமெரிக்கா..!! இராணுவத்தை குவிக்கும் டிரம்ப்..!!
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் காலி பணியிடங்களுடன் ஆண்டு அட்டவணை வெளியிடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு தேர்வு அறிவிப்பின்போதும் கூட காலி பணியிடங்கள் குறித்து தகவல் கூறப்பட்டிருந்தது. தற்போது காலி பணி இடங்கள் விவரம் இல்லாமல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால் டிஆர்பி தேர்வுகளை நம்பி காத்திருக்கும் லட்சக்கணக்கான தேர்வுகள் ஏமாற்றமடைந்துள்ளனர். தங்களை ஏமாற்றும் வகையில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: அப்பாவை ஆட்டையில சேக்காதீங்க!! அன்புமணி எதிர்ப்பால் பாஜக மறுப்பு! திமுக கைவிட்டதால் சிக்கலில் ராமதாஸ்!